சகரியா பூணன்‌

“தேவன்‌ மனுஷனை ஆணும்‌ பெண்ணுமாக சிருஷ்டித்தார்‌... ஒருவருக்கொருவர்‌ ஏற்ற துணையை தேவன்‌ உண்டாக்குகீறார்‌ (ஆதி.1:27; 2:18).

Sex Love & Marriage - Tamil Zac Poonen

© Zac Poonen, 1971

tamil.cfcindia.com

7 9 11 13 12 10 86 Paperback ISBN : 978-81-939898-9-0

“Scripture Quotations are from The Holy Bible, BSI-Tamil O.V Published by: The Bible Society India. Used by Permission. All rights reserved”.

This book has been copyrighted to prevent misuse.

No part of this work may be reproduced or transmitted in any form or by any means - for example, electronic or mechanical, including photocopying and recording without the prior

written permission of the publisher.

For further details please contact: Christian Fellowship Centre

#69, Bellahalli, Kannur Post,

Bengaluru - 562149

Karnataka

India

email: cfc@cfcindia.com

ii

மங்கள வாழ்விற்றுள்‌ . . .

iii

IV

தூய்மையான, தேவ சித்தத்தின்படியான திருமணம்‌ . .. 84 ““பரலோகத்தை உங்கள்‌ இல்லத்தில்‌” கொண்ருவருமல்லவோ!

இதுபோன்ற தெய்வீக திருமண

ஆயத்தத்திற்கு “ஒரு பலிபீடம்‌” உங்களுக்கென இருந்திட வேண்டும்‌!

உங்கள்‌ “சுய விருப்பங்கள்‌

முற்றிலும்‌ அந்த பலிபீடத்தில்‌,

தேவன்‌ முன்பு வைக்கப்படட்டும்‌! “அர்ப்பணிக்கப்பட்ட ஈசாக்கை” 14 தேவன்‌ தருவார்‌, அல்லது

“புறக்கணிக்கப்பட்ட இஸ்மவேலை உங்களிடமிருந்து அகற்றிப்‌ போருவார்‌! ! எதுவாயிருந்தாலும்‌,

தேவனுடைய கரத்தினால்‌ நடத்தப்பட்டு, தேவனுடைய கரத்திலிருந்து பெற்றிரும்‌ “மங்களகரமான . . . ஆசீர்வதிக்கப்பட்ட திருமணம்‌!” அனைத்து உத்தம கிறிஸ்தவ

vi

“பாலியம்‌' சீரழியாதிருக்க கவனம்‌!

6

ச்ம்‌ உணர்வுகளில்‌ “பாலிய உணர்வுதான்‌” அதிக சக்தி வாய்ந்த உணர்வு ஆகும்‌! அதை வெடிகுண்டு சக்திக்குகூட ஒப்பிடலாம்‌. ஆதிலும்‌, தேவன்‌

அருளின இந்த ஆச்சரியமான ஈவில்‌ மிகுந்த ஆசீர்வாதமும்‌ அடங்கியிருக்கிறது.... அதேசமயம்‌, இந்த ஈவை தவறாய்‌ பயன்படுத்தி விட்டாலோ அழிவின்‌ பிரளையமே ஏற்பட்டுவிடும்‌ என்பதில்‌ சந்தேகம்‌ இல்லை!

இந்த பாலிய உணர்ச்சியும்‌, அதற்குரிய விருப்பமும்‌ ஆண்‌, பெண்‌ ஆகிய இருபாலரிடத்திலும்‌ உண்டு. எல்லோரிடத்திலும்‌ இந்த உணர்ச்சியானது ஒரே விதமாய்‌ வலிமை கொண்டு இல்லாவிட்டாலும்‌, மனுவர்க்கம்‌ முழுவதையும்‌ இந்த உணர்ச்சியானது ஆற்றல்மிக்க சக்தியாகவே ஆட்கொண்டிருக்கிறது. இதன்‌ வலிமை, வாலிப பருவம்‌ தொடங்கி, அதையடுத்து சுமார்‌ 20-வருடங்கள்‌ வரை இருபாலரையும்‌ பலமாய்‌ ஆட்‌ கொண்டுள்ளது. பாலிய உணர்ச்சிகளை நல்வழியில்‌ பயன்படுத்தி, தேவனுக்கு மகிமை செலுத்திட முடியும்‌! அல்லது இதே உணர்ச்சிகளை தீமைக்கு உட்படுத்தி, பிசாசின்‌ ஊழியத்திற்கும்‌ பயன்படுத்திட முடியும்‌! ஒரு வெடி குண்டில்‌ எந்த தவறும்‌ இல்லை! அதை எப்படி... என்ன நோக்கத்திற்காய்‌ பயன்படுத்துகிறோம்‌? என்பதைப்‌ பொறுத்தே அதன்‌ தன்மை அடங்கியுள்ளது! ஆம்‌, “காமம்‌” என்று அழைக்கப்படும்‌ பாலிய உணர்ச்சி ஒரு வெடிகுண்டின்‌ பயன்பாட்டிற்கு ஒப்பாகவே இருக்கிறது. இந்த பாலிய உணர்ச்சிகளை தேவன்‌ அருளின ஈவாக ஏற்றுக்கொண்டு, அதை, அவருடைய ஆளுகையில்‌ ஒருவன்‌ ஞானமாய்‌ பயன்படுத்தினால்‌, அவனுடைய வாழ்வின்‌ உயர்ந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு

8 பாலிய ஈர்ப்பும்‌ தீருமணமும்‌! ஏற்றதாய்‌ அமைந்துவிடும்‌! அதே சமயம்‌, இந்த உணர்ச்சியை தவறாக பயன்படுத்தினால்‌ அது அவனை இழிவான தாழ்விடத்திற்கும்‌ கொண்டு சென்றுவிடும்‌ என்பதும்‌ உறுதி. ஒரு முதுமொழி கூறுவதற்கு ஒப்பாய்‌ “பாலிய உணர்ச்சி ஓர்‌ ஆச்சரியமான ஊழியன்‌! ஆனால்‌, ஒரு

கொடூரமான எஜமான்‌”.

உணவின்மீது விருப்பம்‌! உறங்குவதற்கும்‌ விருப்பம்‌! அதுபோலவே பாலிய விருப்பமும்‌ ஓர்‌ நியாயாமான விருப்பமேயாகும்‌. இந்த விருப்பங்களை தேவனே சிருஷ்டித்திருக்கிறபடி யால்‌, அந்த விருப்பங்களை நியாய பூர்வமாய்‌ திருப்தி செய்வதற்குரிய ஏதுகரங்களையும்‌ தேவன்‌ நியமனம்‌ செய்து வைத்துள்ளார்‌.

தாறுமாறான கண்ணோட்டங்கள்‌:

தேவன்‌ சிருஷ்டித்த இந்த “காம உணர்வுகள்‌ ' புனிதமும்‌, தூய்மையு மானதே ஆகும்‌. மனிதன்‌ பாவத்தில்‌ விழுவதற்கு முன்பாகவே பாலிய உணர்வுகள்‌ சிருஷ்டிக்கப்பட்டதாகும்‌! “மிகவும்‌ நல்லது என தேவன்‌ சிருஷ்டித்த பூர்வ உலகில்‌ இருந்ததுமாயிருக்கிறது! இதிலிருந்து, இதன்‌ புனிதத்தன்மையை நாம்‌ விளங்கிகொள்ளமுடி கிறது. அனால்‌, மனுஷனுடைய வீழ்ச்சிக்குப்‌ பிறகோ, பாலிய உணர்வுகளை குறித்த அவனது கண்ணோட்டம்‌ தாறுமாறாக சீர்குலைந்து, மனுஷன்‌ பாலிய இச்சைகளுக்கு ஒர்‌ அடிமையாய்‌ மாறி விட்டான்‌. எப்படியெனில்‌, ஆதாமும்‌ ஏவாளும்‌ பாவம்‌ செய்தவுடன்‌, அவர்கள்‌ தங்கள்‌ காம உணர்வுகளால்‌ பொங்கி, தங்கள்‌ உறுப்புகளின்‌ நிர்வாணத்திற்காக வெட்கமடைந்து, தங்கள்‌ சரீரங்களை மூடி மறைத்துக்‌ கொள்ள வகைதேடினார்கள்‌! இன்றும்‌, இந்த வீழ்ச்சியின்‌ துயரத்தை நாம்‌ வாழும்‌ இவ்வுலகத்தில்‌ அறுவடைசெய்து கொண்டு தான்‌ இருக்கிறோம்‌. இதன்‌ விளைவாய்‌, மனிதனுக்கு ஆசீர்வாதமாய்‌ இருந்திடவேண்டிய பாலிய உணர்வுகள்‌, இப்போது அவனை அழுத்தும்‌ ஓர்‌ கொடிய சுமையாய்‌ மாறிவிட்டது! தேவனால்‌ அருளப்பட்ட இந்த பங்கானது மனுஷனால்‌ தாறு மாறாக பயன்படுத்தப்பட்ட படியால்‌ “காமம்‌” (பாலிய உணர்வுகள்‌) ஓர்‌ அசுத்தமான அர்த்தமுள்ளதாய்‌ மாறிவிட்டது. திரைப்படங்கள்‌, வியாபார விளம்பரங்கள்‌, புத்தகசாலைகளில்‌ குவிந்துகிடக்கும்‌ ஒழுக்கமற்ற புத்தகங்கள்‌ ஆகிய அனைத்தும்‌, ஓர்‌ தாறுமாறான கருத்தையே கொண்டுவந்து புகுத்தி விட்டன. ஆனால்‌ தேவனுடைய நோக்கத்திலோ இந்த “காம உணர்வானது” தூய்மை நிறைந்ததும்‌, வசீகரம்‌ கொண்டதாகவுமே நிலை நிற்கிறது. இன்று நம்‌ சிந்தைகள்‌ பாலிய உணர்வைக்‌ குறித்து எவ்வளவாய்‌ கெட்டுப்‌ போய்விட்டது என்பதை நிரூப்பிப்பதற்கு ஏராளமான

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 9

நிரூபணங்கள்‌ உள்ளன. 0.5. ரயிஸ்‌ என்பவர்‌ எழுதிய “கிறிஸ்தவ உத்தம பண்புகள்‌” என்ற புத்தகத்தில்‌: “ஓர்‌ களியாட்டு மண்டபத்தில்‌, ஓர்‌ அழகிய பெண்‌, தான்‌ உடுத்தியிருக்கும்‌ ஆடைகளை.... ஒவ்வொன்றாய்‌ கழற்றி, தன்னை நிர்வாணப்படுத்தும்‌ நிகழ்ச்சியை நடத்துகிறாள்‌!” என அறிவிக்கப்பட்டால்‌, அதைக்‌ கண்டு களித்திட அந்த அரங்கமே நிரம்பி வழிந்திடக்கூடும்‌! இவ்விதம்‌, தாறுமாறாக்கப்பட்ட “பாலுணர்வு விருப்பத்தை” நீங்கள்‌ விளங்கிக்‌ கொள்ள மற்றொரு உவமானத்தையும்‌ கேளுங்கள்‌: நீங்கள்‌ ஒரு புதிய தேசத்திற்கு வந்து, அங்குள்ள களியாட்டு மண்டபத்தின்‌ மேடையில்‌ “ஓர்‌ பரவச நிகழ்ச்சி” நடத்துகிறீர்கள்‌. அந்த நிகழ்ச்சி என்னவெனில்‌, ஓர்‌ மூடிய பெரிய தாம்பாளத்துடன்‌ பிரவேசித்த நீங்கள்‌, அந்த தாம்பாளத்தின்‌ மூடியை கொஞ்சங்‌ கொஞ்சமாய்‌ அகற்றி, உள்ளே என்ன ஒருக்கிறது என்பதை எல்லோரும்‌ காணும்படி செய்து விட்டீர்கள்‌! அந்த தாம்பாளத்திலிருந்த மட்டன்‌ ரோஸ்ட்டையும்‌, சிக்கன்‌ பிரியாணியையும்‌ கண்டு ஐனங்கள்‌ ஆரவாரத்தோடு கரங்களைத்‌ தட்டி மகிழ்ந்தார்கள்‌! சொல்லுங்கள்‌, இவ்வித ஜனங்களைக்‌ குறித்து நீங்கள்‌ என்ன எண்ணுவீர்கள்‌? “உணவை பற்றிய பசி உணர்வில்‌ இந்த நாட்டுமக்களுக்கு புத்தி தடுமாறிவிட்டது போலும்‌!” என்றுதானே எண்ணுவீர்கள்‌! அதுபோலவே, தன்‌ ஆடையை ஓவ்வொன்றாய்‌ கழற்றும்‌ அந்த களியாட்டு அரங்கிற்கு வேறொரு உலகத்திலிருந்து வந்த ஒருவன்‌ “இது என்ன? காம உணர்வைக்‌ குறித்த விஷயத்தில்‌ இந்த நாட்டு மக்களுக்கு புத்திதடுமாறிவிட்டது போலும்‌!” என எண்ணக்கூடுமல்லவா?.... என, இவ்வாறு காம உணர்வைக்‌ குறித்த மக்களின்‌ தாறுமாறான போங்கை விளக்கினார்‌.

மாறுபாடான இந்த உலகத்தில்‌ தேவனுக்கென “ஓர்‌ ஒளியா யிருந்து” பிரகாசித்திடவே ஒரு கிறிஸ்தவன்‌ அழைக்கப்பட்டிருக்‌ கிறான்‌. ஆகவே இந்த உலகம்‌ பாலிய உணர்வுகளை இழிவாக கண்டு, அதை வெறும்‌ உடற்கூற்று கவர்ச்சியாகவும்‌ இன்பம்‌ தரும்‌ வாய்க்‌ காலாகவும்‌ காண்பதற்கு எதிராக நாம்‌ எதிர்த்து நிற்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.

பாலிய உணர்வுகளை பாவமாகவும்‌, வெட்கத்திற்குரியதாகவும்‌ நாம்‌ காணாதிருக்க, தேவ ஆவியானவர்‌ நம்‌ மனதை புதிதாக்கி, தேவன்‌ காணும்‌ விதமாகவே நாமும்‌ கண்டிடச்‌ செய்வாராக! ஆம்‌, பாலிய உணர்வுகளை புனிதம்‌ நிறைந்ததாகவும்‌ வசீகரத்திற்குரியதாகவுமே தேவன்‌ காண்கிறார்‌!

இன்றுள்ள மார்க்கத்திலும்‌, தத்துவபோதனைகளிலும்‌, பாலிய உணர்வானது மாறுபாடான கண்ணோட்டத்தோடு காணப்பட்டு, “இந்த மனுவுடல்‌ பொல்லாதது! இதை சீக்கிரம்‌ களைந்து போட வேண்டும்‌” என்றே கருதுகிறார்கள்‌. அல்லது, இதற்கு நேர்மாறாக,

10 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌! தங்கள்‌ சரீரத்தையே சுற்றிவந்து பூஜித்து, அதன்‌ விருப்பங்கள்‌ ஒவ்வொன்‌ றையும்‌ யாதொரு “வெட்கமேதுமின்றி” நிறைவேற்றி வைக்கிறார்கள்‌!

ஆவி, ஆத்துமா, சரீரமென தேவனால்‌ சிருஷ்டிக்கப்பட்ட நம்‌ உடற்கூற்றில்‌ சரீரத்தின்‌ முக்கியத்தன்மை குறைவானதாய்‌ இருந்தாலும்‌, “சரீரமும்‌ தேவனுடைய நன்மையான பங்காகவே” சிருஷ்டிக்கப்‌ பட்டிருக்கிறது. ஆகவே தேவனுடைய திட்டத்தில்‌, சரீரத்திற்கு ஓர்‌ நிச்சயமான நோக்கமிருக்கிறது. சரீரம்‌ பரிசுத்தாவியானவர்‌ தங்கும்‌ ஆலயமாக இருக்கிறபடியால்‌, ஒருவன்‌ தன்‌ சரீரத்தைக்‌ கொண்டும்‌ தேவனை மகிமைப்படுத்த வேண்டும்‌ என வேதாகமம்‌ போதிக்கிறது கொரி. 6:138-20). எனவேதான்‌, தேவனுக்கு நம்மை ஜீவபலியாக தந்து ஆராதனை செய்திடும்‌ செயலாக, நம்‌ சரீரங்களை அவருக்கு முன்‌ ஒப்பு கொடுக்க வேண்டும்‌ என ரோமர்‌2:1-ம்‌ வசனம்‌ நமக்கு புத்தி சொல்லுகிறது. ஒட்டு மொத்தமாய்‌, தன்னுடைய சரீரமே பாவத்திற்கு மூலகாரணம்‌ என எண்ணுகிறவர்களுக்கு மார்டின்‌ லூத்தர்‌ கீழ்கண்டவாறு சவாலிட்டு கூறினார்‌: “ஆண்டவராயெ இயேசுவுக்கும்‌, இந்த பூமியில்‌ ஒரு சரீரமிருந்தது! ஆனால்‌ அந்த சரீரத்துக்குள்‌ பாவம்‌ பிரவேசிக்கவில்லை! பிசாசிற்கோ சரீரமேதுமில்லை.... ஆனால்‌ அவனோ பாவத்தால்‌ நிறைந்திருந்தான்‌! ' பார்த்தீர்களா, பாவத்தின்‌ வேர்‌ சரீரத்தில்‌ காணப்படவில்லை. அது, மனுஷனுடைய இருதயத்திலேயே வேர்‌ விடுகிறது! பாவத்திலிருந்து அடைந்திடும்‌ விடுதலை, சரீரத்தையும்‌ அதின்‌ ஆசைகளையும்‌ புறக்கணிப்பதால்‌ அல்ல... மாறாக இருதயத்தின்‌ மாற்றத்தினால்‌ விளைந்திடும்‌ செயலாயிருக்கிறது. ஆகவே, சிலர்‌ ஜெபிப்பதைப்‌ போல்‌ ““ஓ தேவனே! என்னுடைய பாலிய விருப்பங்களை என்னை விட்டு அகற்றிவிடும்‌!” என ஒருபோதும்‌ ஜெபித்திடக்‌ கூடாது. அவ்வித ஜெபம்‌, நம்முடைய வயதிற்கு வரும்‌ “புருஷ-பருவத்தை” நிந்தனை செய்து, சரீரமாகிய தேவனுடைய ஆலயத்தின்‌ ஒரு பகுதியை அழிப்பதற்கு சமமாகும்‌. நாம்‌ புருஷராயிருந்து ஜெயித்து வாழவே தேவன்‌ விரும்புகிறார்‌. அடுப்பில்‌ எரிந்து கொண்டிருக்கும்‌ நெருப்பு நலம்‌ தான்‌, அதை நாம்‌ அழித்திட தேவையில்லை! அதற்கு பதிலாக, அந்த நெருப்பு வீட்டையே கொளுத்திவிடாதிருக்க நாம்‌ கவனமா யிருக்க வேண்டும்‌, அவ்வளவுதான்‌! நமது பாலிய பகுதியில்‌, ஒரு நோக்கத்தோடுதான்‌ நாம்‌ சோதிக்கபட தேவன்‌ அனுமதித்திருக்கிறார்‌! இந்த நோக்கம்‌, அந்த நாளில்‌ ஏதேன்‌ தோட்டத்தில்‌ ஆதாம்‌ சோதிக்கப்படுவதற்கு தேவன்‌ அனுமதித்த நோக்கத்திற்கு சமமானதாகும்‌. ஆதாம்‌ கள்ளம்‌ இல்லா களங்கமற்றவனாகவே இருந்தான்‌... ஆனால்‌ தேவனோ அவன்‌ பரிசுத்தமாயிருக்குபடியே விரும்பினார்‌! பரிசுத்தமென்பது களங்கமற்ற தன்மையைவிட பன்மடங்கு உயர்ந்ததாகும்‌!

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 11 தேவன்‌ வகுத்து கொடுத்த நெறியை, ஆதாம்‌ தெரிந்து கொண்டு,

சோதனையை ஜெயித்திருந்தால்‌ மாத்திரமே அவன்‌ பரிசுத்தவனாய்‌

மாறியிருக்க முடியும்‌! இதே நிலைதான்‌ இன்று நமக்கும்‌

தரப்பட்டிருக்கிறது!

அசுத்த சிந்தைகள்‌

ஒவ்வொரு வாலிப இளைஞனும்‌, வெகு சீக்கிரத்தில்‌ அசுத்த நினைவுகளின்‌ தாக்குதலால்‌ சோதிக்கப்படுகிறான்‌. பொதுவாக, பாலியத்திற்கான தூண்டுதல்‌ ஸ்திர்களை விட ஆண்களிடமே அதிக வலிமை கொண்டதாய்‌ இருக்கிறது. ஆகவே, ஒரு வாலிப ஸ்திரீக்கு அசுத்த சிந்தை ஏற்படுதல்‌ தாமதித்து... ஒரு வாலிப இளைஞனுக்கோ இந்த தாக்குதல்‌ முதலில்‌ சம்பவிக்கிறது. “அசுத்த சிந்தையே” மனுஷனுடைய இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்‌ தீமைகளில்‌ முதல்‌ தீமையாய்‌ மாற்கு 7:21-ல்‌ இயேசு குறிப்பிட்டார்‌. மனந்திரும்பாத எல்லா மனுஷருடைய இருதயங்களும்‌ பொல்லாததாய்‌ இருக்கிற படியால்‌, இருதய யோசனையைக்‌ குறித்து இயேசு குறிப்பிடும்‌ விளக்கம்‌ அனைவருக்கும்‌ உண்மையானதாகவே இருக்கிறது. விபச்சார ஈடுபாடு கொண்ட மனிதனுடைய மனதை “அசுத்த சிந்தைகள்‌” பாழ்கடி ப்பதைப்‌ போலவே... ஒழுக்க நெறியில்‌ வளர்ந்து வந்த ஒருவனுடைய மனதையும்‌ இந்த அசுத்த சிந்தைகள்‌ பாழ்கடிக்கச்‌ செய்கிறது! ஒழுக்க நெறியில்‌ வாழ்ந்த இவனுக்கு “சமுதாயத்தின்‌ அச்சம்‌” இருந்தபடியாலும்‌, காம சந்தர்ப்பங்கள்‌ இல்லாதபடி யாலும்‌ “அந்த மனிதனைப்‌ போல்‌” விபச்சாரம்‌ செய்யவில்லை, அவ்வளவுதான்‌. சோதனைக்கும்‌, பாவத்திற்கும்‌ இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாகும்‌. இயேசுவும்கூட “நம்மைப்‌ போலவே எல்லாவிதத்திலும்‌ சோதிக்கப்பட்டார்‌ (எபி.4: 75). அதிலும்‌, ஒரு முறைகூட அந்த சோதனைகளுக்கு “தன்‌ மனதளவில்‌ கூட” இணங்காதபடியால்‌, அவா்‌ ஒருபோதும்‌ பாவம்‌ செய்யவில்லை. நாம்‌ இந்த பூமியில்‌ வாழும்‌ கடைசிநாள்‌ வரை சோதிக்கப்படுவோம்‌. ஆனால்‌, நாம்‌ பாவம்‌ செய்திடத்‌ தேவையில்லை. பாலிய இச்சைகள்‌, நம்‌ மனதில்‌ கலந்துவிட அனுமதிக்கும்போது மாத்திரமே நாம்‌ பாவம்‌ செய்கிறோம்‌ (யாக்‌.1:15). இவ்வாறு நம்முடைய மனதில்‌ தெறித்து விழும்‌ “பாலிய தூண்டுதலுக்கு” நாம்‌ இணங்க மறுத்துவிட்டால்‌, நாம்‌ பாவம்‌ செய்திட வில்லை! பல வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த “தூயவான்‌ சபையினார்‌” கூறும்போது “பறவைகள்‌ என்‌ தலைக்குமேல்‌ பறப்பதை என்னால்‌ தடுக்க இயலாது! ஆனால்‌ என்‌ தலையில்‌ அமர்ந்து கூடுகட்டிக்‌ கொள்வதை நான்‌ நிச்சயம்‌ தடை செய்திட முடியும்‌!” என்றனர்‌. ஒரு காம சிந்தை எனக்குள்‌ தோன்றி, அது என்‌ சிந்தையில்‌ கலந்து நான்‌

12 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌! களிகூரும்‌ “அந்த கண நேரத்தில்‌” தலையில்‌ கூடுகட்ட அனுமதித்து விட்டேன்‌! அல்லது, நான்‌ பாவம்‌ செய்து விட்டேன்‌!

காம சிந்தைக்குள்‌ சென்றுவிட்ட ஒருவனை, அந்த சிந்தை அவனை தனக்கு அடிமையாக்கி கொள்ளும்‌ காலங்கள்‌ அதிகரிக்க அதிகரிக்க, அந்த சிந்தையிலிருந்து மீட்கப்படுவதும்‌ அதிக கடினமாய்‌ மாறுகின்றது. எவ்வளவு துரிதமாய்‌ நாம்‌ மீட்கப்பட வாஞ்சிக்கிறோமோ, அவ்வளவு துரிதமாய்‌ இலகுவில்‌ நாம்‌ விடுவிக்கப்படுவோம்‌. தீமையான பாலிய சிந்தைகளை நாம்‌ ஜெயித்திட வேண்டுமென்றால்‌ 1) நாம்‌ தோல்வியை நேர்மையாய்‌ அறிக்கை செய்வதும்‌ 2) விடுதலை பெற்றிட மெய்யான ஆர்வம்‌ கொண்டிருப்பதும்‌ 4) கிறிஸ்துவோடு நாம்‌ மரித்த அந்த சத்தியத்தின்‌ பங்கை ஏற்றுக்கொள்ளும்போதும்‌ 4) நம்‌ சரீரங்களையும்‌ சிந்தைகளையும்‌ அண்டவருக்கு முற்றிலுமாய்‌ ஒப்புக்கொடுக்கும்போது அசுத்த காமசிந்தைகளை நாம்‌ ஜெயித்திட முடியும்‌! (ரோமர்‌ 6:1-14).

இவ்வாறு நாம்‌ தொடர்ச்சியான ஜெய வாழ்விற்குள்‌ வாழ வேண்டுமென்றால்‌ “ஆவியில்‌ நடக்கிறவர்களாய்‌ ' தேவன்‌ நம்மை சிட்சித்து நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அவருக்கு நாம்‌ தரவேண்டும்‌ (கலா. 5:16-19). இயேசு கற்றுக்‌ கொடுக்கிறபடி, தீய புத்தகங்களை படிப்‌ பதற்கும்‌ அவைகளைக்‌ காண்பதற்கும்‌ நம்‌ கண்களைப்‌ பிடுங்கி எறியவும்‌ பாலிய சிந்தைகளைத்‌ தூண்டும்‌ சேதிகளை கேட்க விரும்பும்‌ நம்‌ காது களை வெட்டி எறிவதற்கும்‌.... நாம்‌ தவறிவிட்டால்‌, நம்‌ சந்தைகளை கற்பின்‌ ஒழுக்கத்திற்கு கொண்டுவர நம்மால்‌ ஒருபோதும்‌ முடியாது! இதுவே, இயேசு கற்பித்த போதனையின்‌ சாரமாகும்‌ (மத்‌ 5:28-30). இந்தப்‌ பாலிய சிந்தையிலிருந்து நாம்‌ விடுதலை பெற வேண்டு மென்றால்‌, நம்முடைய சரீரத்தை இயேசு கூறிய விதமாய்‌ சிட்சித்து ஒடுக்குவது மிகுந்த அவசியமாகும்‌! மிக வலிமையான பரிசுத்தவான்கள்‌ கூறிய அறிக்கையில்‌ “தங்கள்‌ மனதில்‌ தோன்றிய பாலிய ஈர்ப்பு சோதனை களுக்கு எதிராய்‌ ஓர்‌-தொடர்‌ யுத்தம்‌ தாங்கள்‌ செய்ய வேண்டி யிருந்ததை” கூறியிருக்கிறார்கள்‌. குறிப்பாய்‌, தங்கள்‌ சரீரங்களை வெகு கடினமாய்‌ சிட்சிக்க வேண்டியிருந்ததை அவர்கள்‌ கூறியிருக்கிறார்கள்‌!

யோபு திருமணமாகி 10-பிள்ளைகளை உடையவராய்‌ இருந்தார்‌. ஆகிலும்‌ அசுத்த பாலிய சிந்தையிலிருந்து தான்‌ விடுபடுவதற்கு “தன்‌ கண்களை” கட்டுப்படுத்த வேண்டும்‌ என்பதை அறிந்திருந்தார்‌. எனவேதான்‌ “எந்த ஒரு கன்னிப்பெண்ணையும்‌ பாலிய இச்சையோடு பார்க்காதிருக்க என்‌ கண்களோடு உடன்படிக்கை பண்ணினேன்‌!” எனக்‌ கூறினார்‌(யோபு 31:1). எல்லா புருஷர்களுக்கும்‌ அபாயமான சோதனைகள்‌ கண்களின்‌ வழியாகவே தாக்குகின்றன. மிகுந்த கவனம்‌ கொள்ளாதபட்சத்தில்‌, ஒரே ஒரு அசுத்த சிந்தையானாலும்‌ அல்லது ஒரே ஒரு அசுத்த படங்களானாலும்‌.... நம்‌ கண்களின்‌ கதவைத்‌ தாண்டி

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 13 மனதிற்குள்‌ செல்ல அனுமதித்து விட்டால்‌, அந்த மனதில்‌ விழுந்து விட்ட பிம்பத்தை அகற்றுவது வெகு கடினமானதாகும்‌!

ஓர்‌ கட்டுப்பாடான வாழ்க்கையை விரும்பும்‌ நீங்கள்‌, படுக்கையை விட்டு எழுந்தவுடன்‌ அல்லது இரவு படுக்கைக்கு போகும்‌ முன்‌ ஒவ்வொரு காலையும்‌, ஒவ்வொரு இரவும்‌ தினசரி தியானத்தில்‌ தேவனை நெருங்கிச்‌ சேர வேண்டும்‌. காலையில்‌ படுக்கையை விட்டு எழுந்த பிறகும்‌, தொடர்ந்து படுக்கையில்‌ புரண்டு கொண்டிருந்தால்‌, நம்முடைய சிந்தையின்‌ கதவை “தய எண்ணங்கள்‌ உள்ளே போகும்படி” திறந்து விட்டவர்களாய்‌ இருப்போம்‌. நம்முடைய மனதானது தேவனுடைய வார்த்தையினால்‌ தினசரி நிறைந்திருக்கச்‌ செய்ய வேண்டும்‌. அவ்வாறு செய்வது, தீய சிந்தையிலிருந்து நம்மை காத்துக்‌ கொள்வதற்கு ஒர்‌ பாதுகாப்பான வழிமுறையாகும்‌! இதை தாவீது எடுத்துக்கூறும்போது “நான்‌ உம்முடைய வார்த்தை களை சிந்தித்து, அவைகளை என்‌ இருதயத்தில்‌ பத்திரப்படுத்தி வைத்தேன்‌! அவைகள்‌ என்னை பாவத்திற்கு விலக்கி காக்கின்றன” எனக்‌ கூறினார்‌ (சங்கீதம்‌ 119:11).

மேலும்‌ நமது பரிசுத்த வேதாகமம்‌ “நீங்கள்‌ தேவனுடைய அங்கீகாரத்திற்கு மதிப்பு கொடுப்பவர்களாய்‌ இருந்தால்‌, உங்கள்‌ மனதை பரிசுத்தமுள்ளவைகள்‌ எவைகளோ, சரியானவைகள்‌ எவை களோ, தூய்மையானவைகள்‌ எவைகளோ, எது நேர்த்தியானதோ அல்லது எது நன்மையானதோ.... அவைகளில்‌ உங்கள்‌ மனதை பதித்து வையுங்கள்‌” எனக்‌ கூறுகிறது (பிலி. 4: 8-18 மொழிபெயர்ப்பு). இந்தியா விற்கு வருகை தந்த ஹென்றி மார்டின்‌ என்ற சிறந்த மிஷனரி, தான்‌ வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில்‌ “எனக்கு எப்போதெல்லாம்‌ அசுத்த சிந்தையின்‌ போராட்டம்‌ வருகின்றதோ, அப்போதெல்லாம்‌ மேலே குறிப்பிட்ட பிலிப்பியர்‌ 4:8-ம்‌ வசனத்திற்கு கீழ்ப்படிந்து அதை எனக்குள்‌ ஊசி ஏற்றுவதுபோல்‌ செலுத்தி விடுவேன்‌ ' என எழுதினார்‌. மேலும்‌, ஒரு பெண்ணைக்‌ குறித்து தன்‌ மனதில்‌ பாலிய சிந்தைகள்‌ தோன்றும்போதெல்லாம்‌, உடனே அவர்‌ ஜெபிக்க தொடங்கி “கர்த்தாவே இந்தப்‌ பெண்‌ தன்‌ இருதயத்திலும்‌ மனதிலும்‌ சுத்தமுள்ளவளாய்‌ இருக்க அனுக்கிரகம்‌ செய்தருளும்‌! இந்தப்‌ பெண்‌ பரிசுத்தாவியானவர்‌ தங்கும்‌ ஆலயமாய்‌ திகழவும்‌, உமது பணிக்கும்‌ உமது மகிமைக்கும்‌ அர்ப்பணித்‌ தவளாய்‌ வாழ உதவி செய்தருளும்‌!” என்றே ஜெபம்‌ ஏறெடுப்பார்‌. இவ்விதமாய்‌, அவர்‌ அந்தப்‌ பெண்ணிற்காக அவர்‌ ஜெபித்த பின்பு, அந்தப்‌ பெண்ணைக்‌ குறித்த யாதொரு அசுத்த சிந்தை கொள்ளும்படியான துணிவு அவருக்கு ஏற்பட்ட தில்லை! சிந்தையின்‌ தூய்மையை காப்பதற்கு, இந்த தேவமனிதர்‌ கடைபிடித்த முறை மிக அற்புதமானதாகும்‌!

14 பாலிய ஈர்ப்பும்‌ தீருமணமும்‌!

இன்றைய கற்பு ஒழுக்கத்‌ தரம்‌ உலகமெங்கும்‌ தரம்‌ குறைந்த நிலையில்‌ இருப்பதால்‌, அசுந்த சிந்தைகளிலிருந்து முற்றிலும்‌ விடுதலை பெறுவது கடினம்‌! என சிலர்‌ சொல்லக்கூடும்‌. ஆனால்‌, இந்தப்‌ பாலியத்து தீமைகள்‌ நமது 21-ம்‌ நூற்றாண்டிற்கு புதிதானதொன்றல்ல! முதலாம்‌ நூற்றாண்டு கொரிந்து பட்டணத்தில்‌ கற்பு ஒழுக்கக்‌ கேடும்‌, வேசித்தன தாராள மனப்போங்கும்‌ நிறைந்து கிடந்தது! ஆகிலும்‌ அங்கிருந்த கிறிஸ்தவர்கள்‌, தங்கள்‌ சிந்தைகளைச்‌ சிறைப்படுத்தி,

அவைகளை கிறிஸ்துவின்‌ கீழ்ப்படிதலுக்குள்‌ கொண்டுவந்து வாழ்ந்திட தேவ ஆவியானவர்‌ அவர்களை எச்சரித்தார்‌ (2 கொரி.10:15). இன்றும்‌ அவ்வாறே செய்யும்படி தேவ ஆவியானவர்‌ நமக்கு கூறுகிறார்‌. ஜீவனுக்குள்‌ நடத்தும்‌ பாதை இடுக்கமும்‌, கடினமாயும்‌ தோன்றலாம்‌/ ஆனால்‌, அவ்வழியில்‌ நாம்‌ நடந்து சென்றிட பரிசுத்தாவியானவர்‌ நம்மைப்‌ பெலப்படுத்த வல்லவராயிருக்கிறார்‌!

இவ்வித கற்பு ஒழுக்க வாழ்க்கை வாழும்‌ பொருட்டு, நம்முடைய “எதிர்பாலரோடு விரோதம்‌” கொண்டிருக்கும்‌ மனப்பான்மையை நாம்‌ ஏற்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என நாம்‌ ஒருபோதும்‌ எண்ணிவிடக்‌ கூடாது. அவ்வாறு நாம்‌ இங்கு பொருள்படுத்தவே இல்லை! நம்‌ எதிர்‌ பாலரோடு கொண்டிருக்கும்‌ ஈர்ப்புத்தன்மையையும்‌ பாவமாக கருதிவிடக்‌ கூடாது. அது, இயற்கை வரம்பிற்கு உட்பட்ட தேயாகும்‌! தேவனுடைய செளந்தரியமான படைப்பில்‌ “வசீகரமான முகமும்‌”

அடங்கியிருப்பதை நாம்‌ மறந்துவிடக்‌ கூடாது! ஆகிலும்‌ வீழ்ச்சி

யடைந்த சிருஷ்டிகளாகிய நாம்‌, கவனமாய்‌ இருக்கவில்லையென்றால்‌ .. அழகுள்ள தோற்றம்‌, பின்பு நம்மை இச்சைக்குள்‌ இழுத்து செல்வதை நாம்‌ காண முடியும்‌. ஆகவே எதீர்பாலரின்‌ வசீகரம்‌, அவர்கள்‌ பட்சத்தில்‌ தூய்மையாய்‌ இருந்தாலும்‌... நமக்கோ, அசுத்த சிந்தையாய்‌ மாறிவிட முடியும்‌! கெய்த்மில்லர்‌ என்ற பரிசுத்தவான்‌ “மறுமுறை தொடுதல்‌” என்ற புத்தகத்தில்‌ கீழ்காணும்‌ விதமாய்‌ கூறியிருக்கின்றார்‌: “முழு அர்ப்பண முள்ள கிறிஸ்தவனாய்‌ மாறியவன்‌, எதிர்பாலரின்‌ வசீகரத்தை அறிந்து கொள்ள முடியாதபடி, அதற்கு தூர விலகி நிற்பான்‌ என கருதி விட கூடாது. எதிர்பாலரின்‌ வசீகரத்தை அறிந்து கொள்ளும்‌ உணர்வு பாவமல்ல! அவ்வித உணர்வு உங்களுக்கு இல்லையென்றால்‌, உங்களுக்கு ஆவிக்குரிய தற்பரிசோதனை வேண்டுமென்று நான்‌ கூற மாட்டேன்‌. ஆனால்‌ எதிர்பாலரின்‌ வசீகர ரூபத்தை நீங்கள்‌ அறிந்து கொள்ள முடியாதவராய்‌ இருந்தால்‌, உங்களுக்கு “சரீர, வைத்திய சோதனை” வேண்டுமென்றே கூறுவேன்‌. இதை உங்கள்‌ மீது கொண்ட கரிசனை மிகுந்த அக்கறையோடுதான்‌ கூறுகிறேன்‌! ஆகவே “வசீகரத்தை உணர்வது பாவமல்ல! இன்னமும்‌ வலியுறுத்தி கூற

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 15

வேண்டுமென்றால்‌ “பாவம்‌ செய்யத்‌ தரண்ட ப்படுதலின்‌ உணர்வு” நம்‌ கிறிஸ்தவ குணாதிசயத்தில்‌ வளர்ச்சியடைவதற்கு மிக அவசியமான உணர்வு என்றே கூறுவேன்‌. உதாரணமாய்‌ ஒரு குருடன்‌ தனக்கு முன்‌ உள்ள மேஜையில்‌ இருக்கும்‌ தங்கத்தை திருடவில்லை என்பதற்காக, அவனை நேர்மையாளன்‌ எனக்‌ கூறிட இயலாது. ஆனால்‌ அந்த தங்கத்தைக்‌ கண்ட ஒரு மனிதன்‌, அதை எடுத்துக்‌ கொள்ளும்‌ ஆர்வத்தால்‌ உந்தப்பட்டு “திருடக்‌ கூடாது!” என்ற பண்பை தெரிந்து கொள்வதில்தான்‌ அவனுக்குள்‌ ஆவிக்குரிய தன்மை வளர்ச்சி அடை கின்றது. ஆனால்‌ தங்கத்தையோ வசீகரத்தையோ கண்ட ஒருவன்‌, தன்‌ உணர்வை தவறான செயலுக்கு பயன்படுத்துவதுதான்‌ குற்ற முள்ளதாய்‌ இருக்கிறது” எனக்‌ கூறினார்‌.

ஆகவே, நமக்குள்‌ இருக்கும்‌ பரிசுத்தாவியானவரின்‌ சத்தத்திற்கு உடனடியாக கீழ்ப்படி வதில்தான்‌ நம்முடைய பாதுகாப்பு அடங்கியிருக்‌ கிறது. அவரே நம்மை உணர்த்தி, நம்‌ கண்களையோ நம்‌ சிந்தை களையோ வேறு திசைக்குத்‌ இருப்பும்படி கட்டளை கொடுக்கிறார்‌. எனவே நாம்‌ அவ்வப்போது ஜெபிக்க வேண்டிய முக்கியமான ஜெபம்‌ என்னவெனில்‌ “ஆண்டவரே என்னால்‌ மேற்கொள்ள முடியாத சோதனைகளை சந்தித்திட என்னை நடத்திட வேண்டாம்‌” என்பதே யாகும்‌. இந்த ஜெபத்தை மெய்பக்தியோடு ஜெபித்த அனேக வாலிபர்கள்‌ ஜெயம்‌ பெற்று வாழ்ந்திருக்கிறார்கள்‌.

சுயபுணர்ச்சி பாவம்‌

மனம்போன போக்கிலெல்லாம்‌ தன்‌ சிந்தையை அலையவிடும்‌ ஒருவன்‌, தன்‌ சரீர பாலிய இச்சைகளை ஒழுக்கக்‌ கேடான முறையில்‌ பூர்த்தி செய்யத்‌ துணிந்திடுவான்‌. இதுபோன்ற இழிநிலை ஓர்‌ மெய்‌ கிறிஸ்தவனுக்கு நிகழ்ந்திட கூடாது. இதைக்‌ குறித்து அப்போஸ்தல னாகிய பவல்‌ கூறும்போது “பந்தைய நிகழ்ச்சிக்கு வரும்‌ போட்டி யாளர்கள்‌ கடுமையான பயிற்சி எடுத்தே வருவார்கள்‌. இவ்வித கஷ்டமான பயிற்சியை, வாடிப்போகும்‌ கிரீடத்திற்காகவே செய்கி றார்கள்‌. ஆனால்‌ நமது பந்தயமோ என்றென்றும்‌ வாடாத ஓர்‌ நித்திய கிரீடத்திற்காகவே இருக்கிறது. ஆகவே, இந்த பந்தயத்தில்‌ உறுதியான தீர்மானத்தோடே ஓடுகிறேன்‌. ஓர்‌ நிழல்‌-போரிட அல்ல.... நான்‌ மெய்யாகவே போரிடுகிறேன்‌! நல்ல எஜமானாய்‌ இருந்து என்‌ சரீரத்தை அடக்கி ஆளுகின்றேன்‌. மற்றவர்களுக்குப்‌ பிரசங்கிக்கிற நான்‌ கூட தகுதியிழந்து போக முடியும்‌ என்ற அபாயத்தையும்‌ நான்‌ உணர்ந்திருக்‌ கிறேன்‌” எனக்‌ கூறினார்‌ (1 கொரி. 9: 25-27 -1 மொழிபெயர்ப்பு). அவர்‌ மேலும்‌ கூறும்‌ போது “ஒவ்வொருவனும்‌ தன்‌ சரீரத்தை அடக்கியாள கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. அவனவன்‌ தன்‌ தன்‌ சரீர பாண்டத்தை பரிசுத்தமாயும்‌ மரியாதைக்குரியதாயும்‌.... தேவனை அறியாத அஞ்ஞானிகள்‌ செய்வது

16 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌!

போல்‌ சரீரத்தை மோக இச்சைக்கு உட்படுத்தும்‌ அவயவமாய்‌ கையாண்டிடாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌” எனக்‌ கூறினார்‌ (1தெச.4:4,5 - 1 மொழி பெயர்ப்பு).

“தூய வேதமும்‌, பாலியத்து இன்றைய கோட்பாடுகளும்‌” என்ற புத்தகத்தை எழுதிய 0.0 ஸ்கோரர்‌ கூறும்போது “அப்போஸ்தலனாகிய பவுல்‌ 1தெசலோனிக்கேயேர்‌ 4:4,5 வசனங்களைக்‌ கூறியபோது, வேறொரு விஷயத்தைக்‌ குறித்தும்‌ அறிவுறுத்துவதை நாம்‌ காண்கிறோம்‌! அதுதான்‌, தனிமையில்‌ ஒருவன்‌ ஒளிப்பிடத்தில்‌ செய்திடும்‌ சுயபுணர்ச்சி பாவம்‌. ஆகிலும்‌, புதிய ஏற்பாடு ஒரு மனுஷனுடைய வாழ்வில்‌ உள்ள அந்தரங்கங்களை அலசிப்‌ பார்க்க எத்தனம்‌ எடுப்பதில்லை. இன்றைய நாகரீக மனோ தத்துவங்கள்‌ அவ்வித முயற்சியை மேற்கொள்கிறது. ஆனால்‌, கிறிஸ்துவோ அல்லது அவரது அப்போஸ்தலர்களோ அவ்வாறு செய்திட துணிந்தது இல்லை. ஆகிலும்‌ சுய - இன்பம்‌ பூர்த்தி செய்யும்‌ விருப்பம்‌, தேவன்‌ நம்‌ சரீரத்தின்‌ மீது கொண்டிருக்கும்‌ அதிகாரத்தை மீறும்‌ செயலே ஆகும்‌! இது “பாலிய இன்பமே' வாழ்க்கையின்‌ விருப்பமாய்‌ கொண்டு வாழும்‌ ஓர்‌ கொடிய சுயநலம்‌ ஆகும்‌. ஒரு வாலிபனோ அல்லது வாலிப ஸ்திரீயோ தன்‌ சொந்த இச்சைகளை ஆண்டு கொள்ளும்‌ எஜமானாய்‌ இல்லாமல்‌ அதற்கு ஓர்‌ அடிமையாய்‌ மாறும்‌ கொடுமை! பொதுவாக, பாலிய உறவு சிந்தைகள்‌, ஆவிக்குரிய தீர்க்கமான பார்வையையும்‌ வல்லமையையும்‌ அழித்துவிடும்‌! சரீர உணர்ச்சிகள்‌ நம்‌ ஜீவியத்தை ஆண்டுகொள்ளும்‌ பட்சத்தில்‌ ஆவியானவர்‌ நம்மைவிட்டு விலகிவிடுவார்‌! மனோ தத்துவப்படி பார்த்தாலும்‌ “இதுபோன்ற பாவங்கள்‌” ஓர்‌ முதிர்ச்சியற்ற குணாதிசயம்‌ அல்லது ஒருவன்‌ சுயத்தின்‌ வலைக்குள்‌ சிக்கிக்கொண்ட நிலையாகும்‌... இவ்வித சுய - இன்பங்கள்‌ கண்டிப்பாய்‌ ஜெயிக்கப்பட வேண்டும்‌. இதுபோன்ற வேசித்தன செயல்கள்‌, வேறு ஒரு நபரை பாதிக்‌ காதபடியால்‌ மிக மோசமான பாவமாக கருதப்படாமல்‌ இருக்கக்கூடும்‌!

ஆனால்‌, இதுபோன்ற செயலில்‌ ஈடுபடுகிறவன்‌, ஒர்‌ அசுத்த உத்வேகத்திற்கு உடன்பட்டபடியால்‌, தன்‌ சரீர உணர்ச்சிகளை ஆண்டூகொள்வதற்கு தகுதியற்றவன்‌ என்பதையே நிரூபிக்கிறான்‌!

இவனது இழிசெயல்‌, அவனையே இழிவுபடுத்துகிறபடியால்‌ “ஒப்பற்ற கிறிஸ்தவன்‌” என்ற சாட்சிக்குப்‌ பெரும்‌ பங்கத்தை “தானே” வரவழைத்துக்‌ கொள்கிறான்‌! இதற்குரிய நல்ல விடையானது, அவருடைய சித்தத்திற்குள்தான்‌ அடங்கியிருக்றெது! ஒரு பொது - அறிவு உணர்வுகூட “இவ்வித பாலிய தூண்டுதல்‌, கண்டிப்பாய்‌ எதிர்க்கப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே ஜெயிக்கப்பட வேண்டும்‌ என்பதை உணர்ந்திருக்கும்‌! ' என்றார்‌.

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 17

சுய - புணர்ச்சி யாதொரு வியாதிக்கு நம்மை இழுத்துச்‌ செல்லா

விட்டாலும்‌, அது கண்டிப்பாய்‌ ஒருவனை மனச்சோர்வுக்குள்ளும்‌, குற்ற உணர்வுக்குள்ளும்‌ நடத்தி விடும்‌! மேலும்‌, அவனது ஆள்தன்மையின்‌ வலிமையிலும்‌ பெலவீனமடைந்து.... முடிவில்‌ அவன்‌ தனது ஆவிக்குரிய ஊக்கத்தை இழந்து, தேவனோடு கொண்ட தனது உறவிலும்‌ துண்டிக்கப்படுகிறான்‌. இவ்வித சுய - இன்ப பழக்கத்திற்கு அதிகமாய்‌ ஈடுபட்ட ஒருவன்‌, தன்‌ திருமண வாழ்வில்‌ உள்ள பாலிய உறவில்‌ பிரச்சனைக்குரியவனாய்‌ மாறுவான்‌!

ஆகவே, சுய- புணர்ச்சியை கொடிய பாவம்‌ என்றே கூறவேண்டும்‌!

ஏனெனில்‌, “தேவன்‌ தந்த பாலிய வரத்தை” இவன்‌ இழிவாய்‌ துர்பிரயோகம்‌

செய்து விட்டான்‌! இந்த பாவத்திற்காக அவன்‌ கண்டிப்பாய்‌ மனந்திரும்பி

அதை விட்டுவிடவும்‌ வேண்டும்‌.

பொதுவாய்‌, நல்ல கிறிஸ்தவ வாலிபர்கள்கூட தங்கள்‌ உலக

நண்பர்களிடமிருந்து, பாலியத்தைக்‌ குறித்த “கோணலும்‌ மாறு பாடான” தகவல்களைக்‌ கேட்டு அறிந்து கொள்கிறார்கள்‌. இதனிமித்‌ தமே, இந்த கேடான தீய பழக்கத்திற்கு எளிதில்‌ பலியாகி விடுகிறார்கள்‌. இந்த பழக்கத்தில்‌ ஒருமுறை ஈடுபட்டால்‌ கூட.... மீண்டும்‌ அதைச்‌ செய்வதற்குரிய உந்துதல்‌ இருந்து கொண்டே இருக்கும்‌. இவ்வாறு, வலிமையாய்‌ சிறைப்பட்டுப்போன ஒருவனை கிறிஸ்து மாத்திரமே விடுதலை செய்திட முடியும்‌.

உலக நண்பர்கள்‌ கூறும்போது, நம்‌ “தசை நார்கள்‌” அப்பியாசப்‌

படுத்தப்படா விட்டால்‌, உபயோகமற்றதாய்‌ போய்‌ விடும்‌. அதைப்‌ போலவே, பாலிய உறுப்புகளை அப்பியாசப்படுத்தாமல்‌ இருந்து விட்டால்‌, அது உபயோகமற்றதாய்‌ போய்‌ விடும்‌ எனக்‌ கூறுகிறார்கள்‌! இது முற்றிலும்‌ தவறான ஓர்‌ கருத்தாகும்‌. மருத்துவ நிபுணர்கள்‌ இதை மறுத்து, பாலிய உறுப்புகள்‌ அப்பியாசப்படுத்தப்படாததால்‌, அதனுடைய செயல்திறன்‌ குறையவோ அல்லது கெட்டுப்‌ போவதோ இல்லை! என்றே கூறுகின்றனர்‌. ஒருவன்‌, பாலியத்தின்‌ தூண்டுதலை கட்டுப்பாட்டுக்குள்‌ வைத்திருப்பதினிமித்தம்‌, அவனது மனநிலைக்கும்‌ யாதொரு தீங்கும்‌ ஏற்படாது. ஆகவே பாலியத்து காம விருப்பங்களை கட்டுப்படுத்திடும்‌ ஒருவனுக்கு, மனநிலை பாதிப்பிற்குரிய யாதொரு அபாயமும்‌ ஏற்படுவதில்லை. இதற்கு மாறாக, ஒருவன்‌ பாலியத்து விருப்பங்களை கட்டுப்பாட்டுக்குள்‌ வைத்திருந்தால்‌, அவனது மன வலிமை இன்னும்‌ அதிகமாய்‌ திடப்படும்‌! அவனது மனம்‌, விழிப்புள்ள தெளிந்த புத்தியுள்ளதாய்‌ இருக்கும்‌!

ஒருவன்‌, தன்‌ ஜீவகாலமெல்லாம்‌ தன்‌ பாலியத்து உறுப்பை “ஒருமுறைகூட

பயன்படுத்தாமல்‌' இருந்தாலும்‌, அவனது மனமும்‌ சரீரமும்‌ வலிமை

கொண்டதாகவே இருக்கும்‌!

18 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌!

இரவில்‌ தூங்கும்போது, தானாகவே ஏற்படும்‌ “விந்து வெளியேறு வதைக்‌ குறித்து சில வாலிபர்கள்‌ கவலைப்படுகிறார்கள்‌. அதிக அளவில்‌ உள்ளதை வெளியேற்றுவது, சரீரத்தின்‌ இயற்கையான செயல்பாடே ஆகும்‌! இதை விபரீதமாகவோ அல்லது கவலைக்குரிய ஒன்றாகவோ எண்ணிட அவசியமேயில்லை. வாலிபர்கள்‌ ஒவ்வொருவரும்‌, தங்கள்‌ திருமணத்தீற்கு முன்பே தங்களின்‌ காம வேட்கையை கட்டுப்படுத்தி வாழ அறிந்து கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, திருமணத்திற்கு பிறகுதான்‌ “சுயகட்டுப்பாடு” ஒருவனுக்கு அதிக தேவையாய்‌ இருக்கிறது. ஆகவேதான்‌ திருமணத்திற்குப்‌ பிறகு, பாலிய உறவில்‌ ஓர்‌ ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டியதாயிருக்கிறது. திருமணத்தை, கட்டுபாடில்லாத பாலிய உறவிற்கு பெற்ற “லைசன்ஸாக” எண்ணிவிடவும்‌ கூடாது. ஒருவன்‌ சுயகட்டுப்பாட்டை தன்‌ திருமணத்திற்கு முன்பே கற்றுக்கொள்ளாத பட்சத்தில்‌, திருமணத்திற்குப்‌ பிறகு கற்றுக்‌ கொள்வது கடினமேயாகும்‌! இந்த தீய பழக்கத்திற்கு அடிமைப்பட்டு சிக்கியவர்கள்‌, இதிலிருந்து எப்படி விடுபடுவதென கவலை கொண்டிருக்கக்‌ கூடும்‌. விடுதலையின்‌ ஒரே வழியாய்‌ இருப்பதெல்லாம்‌, கிறிஸ்துவின்‌ மரணத்திலும்‌ அவரின்‌ உயிர்த்தெழுதலிலும்‌ நம்மை மெய்யாகவே இணைத்துக்‌ கொள்வதில்தான்‌, இந்த பாவச்சங்கிலி மூறிந்து விழும்‌! இவ்விதமாய்‌ நாம்‌ பெற்ற வெற்றி, நம்மில்‌ நிலைத்து தங்குவதற்கு, நம்‌ முழுமையும்‌ பரிசுத்தாவியின்‌ அபிஷேகத்தால்‌ நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும்‌. மேலும்‌, நம்‌ ஜீவியத்தின்‌ அன்றாட காரியங்களில்‌ “சுறுசுறுப்பாய்‌ இருக்கும்படி” நம்மை தயார்‌ செய்து கொள்ள வேண்டும்‌. இவ்வாறு, ஏதாவது ஒரு செயல்பாட்டில்‌ நம்முடைய மனதும்‌, நம்முடைய சரீரமும்‌ “நாள்‌ முழுவதும்‌ ஈடுபாடு கொண்டிருக்க” நம்மை தயார்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. சும்மாவே இருந்து கொண்டு, யாதொரு அலுவலுமில்லாத சரீரமே “மிக எளிதில்‌ மோகத்திற்கு” பலியாகிறது! கடின உழைப்பு கொண்ட ஒருவனுக்கு “இந்த பகுதியில்‌' அதிக பிரச்சனை ஏற்படுவதில்லை! தன்‌ நெற்றி வியர்வை நிலத்தில்‌ விழ பாடுபட்டுதான்‌, ஆதாம்‌ தன்னுடைய உணவை பெற வேண்டும்‌ என தேவன்‌ கூறினார்‌ (ஆதி. 3:19). ஆகவே, மனுஷன்‌ கடினமாய்‌ உழைக்க வேண்டுமென்பதே தேவனுடைய நோக்கமாயிருக்கிறது. ஆனால்‌ இன்றோ, நேரத்தை மிச்சப்படுத்தும்படியான அநேக கண்டுபிடிப்புகளை விஞ்ஞானம்‌ வழங்கியிருக்கிறது. இன்றைய நாகரீக இளைஞனுடைய கையில்‌ அதிகமான நேரம்‌ “வேலையின்றி” கிடக்கின்றது.... இங்குதான்‌, அந்த

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 19

நேரங்களை பிசாசானவன்‌ வஞ்சகமாய்‌ தனக்கென பயன்படுத்த பார்க்கிறான்‌! நேரத்தை மிச்சப்படுத்தும்‌ உபகரணங்களை பயன்படுத்த வேண்டாமென நாம்‌ இங்கு கூறவில்லை! அவைகளை தாராளமாய்‌ பயன்படுத்தலாம்‌. ஆனால்‌, நமக்கு கிடைத்த உபரி நேரங்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தவே நாம்‌ கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.

நம்‌ சரீர சக்தியை நான்கு விதத்தில்‌ செலவிடலாம்‌. 1) சரீர உழைப்பு 2)சிந்தனையில்‌ சுறுசுறுப்பு 3) பரவசமான செயல்பாடுகள்‌ 4) பாலியத்திற்‌ குரிய உறவு! முதல்‌ மூன்று விதத்தில்‌ நம்‌ சரீர சக்தியை செலவிடாத பட்சத்தில்‌.... நான்காவது விதத்தில்‌ நம்‌ சக்தியை விரயமாக்கிட பெரும்‌ அழுத்தம்‌ நமக்குள்‌ ஏற்பட்டுவிடும்‌. ஆனால்‌ இந்த இழிவான பாலியத்து ஈடுபாடு, முதல்‌ மூன்று விதத்தில்‌ சரீர சக்தியை செலவு செய்வதை விட மிக மோசமாய்‌ ஒருவனின்‌ நரம்பு மண்டலத்தையும்‌, சரீர பெலனையும்‌ ஆக்கபூர்வ தன்மையிலிருந்து இழந்து போகச்‌ செய்கிறது.

சில வாலிபர்கள்‌, மற்ற வாலிபர்களைப்போல்‌ பாலியத்‌ தூண்டுதலின்‌ அழுத்தம்‌ இல்லாமல்‌, அதில்‌ மந்த உணர்வு கொண்டவர்‌ களாய்‌ இருக்கின்றனர்‌. இச்சமயத்தில்‌, பாலிய விருப்பத்தின்‌ அழுத்தம்‌ அதிகமாய்‌ கொண்டவர்கள்‌, தங்களை மோசமானவர்களாய்‌ எண்ணி விடக்‌ கூடாது. அதற்கு மாறாக, இவ்வித நிலை அவர்களுக்குள்‌ காணப்படும்‌ “ஆக்கபூர்வ சக்திக்குரிய” அறிகுறியே ஆகும்‌. தங்களுக்குள்‌ இருக்கும்‌ இந்த சக்தியை நலமான வழிகளில்‌ இவர்கள்‌ பயன்படுத்திட முடியும்‌. வாலிபர்களாகிய நீங்கள்‌, பாலிய போராட்டத்திலே விழுந்து கிடக்க தேவன்‌ விரும்பவில்லை. சிந்தையின்‌ மூலமோ அல்லது நமது செயலின்‌ மூலமோ பாலிய உறவுக்கு நம்மைத்‌ தூண்டும்‌ சரீர சக்திகளை தேவனை மகிமைப்படுத்தும்‌ வழிக்கு நடந்திடவும்‌, நம்‌ சக வாலிபர்‌ களுக்கு உதவி புரிவதற்கும்‌ பயன்படுத்தலாம்‌!

ஆகவே ஒவ்வொரு கிறிஸ்தவ இளைஞனும்‌, தன்‌ சரீரத்தை அனுதினமும்‌ ஈடுபாடான பயிற்சிக்கு பழக்கியிருக்க வேண்டும்‌. தன்னுடைய மீதமான நேரங்களை, ஆழ்ந்த வேதாகம ஆராய்ச்சிக்கும்‌ ஜெபத்திற்கும்‌ ஒப்புக்கொடுத்து, தன்‌ மனதை ஆவிக்குரிய பயிற்சிக்குள்‌ ஈடுபடுத்தி, வீண்‌ சம்பாஷணைக்கு விலகி நிற்க வேண்டும்‌. இவ்வாறு, அந்த நாளின்‌ கடைக்குள்‌ வரும்போது, திறனான பல காரியங்களை அவன்‌ செய்து முடித்தது மாத்திரமல்லாமல்‌.... ஆக்கபூர்வ பணியின்‌ ஈடு பாட்டில்‌ சுறுசுறுப்பாய்‌ இருந்தபடியால்‌, படுக்கையில்‌ படுத்தவுடன்‌ நித்திரைஅடைந்து விடுவான்‌! அவனது இரவு படுக்கை, காமசிந்தை களால்‌ தாக்கப்படாமலும்‌, சுயபுணர்ச்சி தூண்டுதலை எளிதில்‌ புறக்‌ கணித்தவனாய்‌, நிம்மதியான நித்திரையில்‌ தான்‌ ஆழ்ந்திருப்பதை அவன்‌ அறிந்து கொள்வான்‌. வேதாகமம்‌ கூறுகிறபடி “சுறுசுறுப்பாய்‌ கடின

20 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌!

பணியாற்றியவன்‌ நிம்மதியாய்‌ தூங்குவான்‌!” என்றே வாசிக்கிறோம்‌ (பிரசங்கி 5:12- [ரத Bible மொழி பெயர்ப்பு).

நம்முடைய உணவுப்‌ பழக்கம்‌ மற்றும்‌ தூக்கத்தை ஓர்‌ ஒழுங்கு முறைக்குள்‌ வைத்துக்‌ கொண்டால்‌, பாலிய உணர்வு தூண்டுதலை கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவருவது சுலபமாயிருக்கும்‌. உணவு, உறக்கம்‌ ஆகிய இந்த இரண்டு பகுதிகள்‌ கட்டுப்பாடே இல்லாது இருப்பவர்கள்‌, மிக எளிதில்‌ பாலியத்‌ தூண்டுதல்களுக்கு பலியாகி விடுவார்கள்‌. ருசிக்கு ஏற்ப பெருந்தீனி உண்பதற்கும்‌, பாலிய உணர்வு தூண்டூதலுக்கும்‌ மெய்யாகவே ஒரு தொடர்பு இருக்கிறது. ஆதியிலிருந்த சோதோம்‌ நகரில்‌ பாலிய காமத்திற்குரிய பாவங்கள்‌ பெருகியிருந்ததற்கு காரணம்‌, அவர்களுக்கு இருந்த ஏராளமான உணவும்‌, உல்லாச சொகுசும்‌, சோம்பேறித்தனமுமே காரணமாகும்‌! (எசே.16:49). இந்த சுய-புணர்ச்சி பாவத்தினால்‌ தோற்கடிக்கப்பட்டவர்கள்‌, தங்கள்‌ உணவுப்பழக்கத்தை ஒழுங்கு செய்து, உபவாச ஜெபத்தோடூ தங்கள்‌ ஆண்டவருடைய முகத்தை தேடினால்‌, வெகு சீக்கிரத்தில்‌ இந்த பழக்கத்தி லிருந்து விடுதலை பெற்றுவிடுவார்கள்‌!

எல்லாவற்றிற்கும்‌ மேலாக, நாம்‌ தொடர்ச்சியாக கர்த்தருடைய பிரசன்னத்தைப்‌ பழகிக்‌ கொண்டவர்களாய்‌ இருக்க வேண்டும்‌! கர்த்தர்‌ எப்போதும்‌ நம்மோடிருக்கிறார்‌ என்றும்‌, அவர்‌ நம்மை கவனித்து கொண்டிருக்கிறார்‌ என்றும்‌, எப்போதும்‌ உணர்வுடையவர்களாய்‌ இருக்கவேண்டும்‌. இன்னொரு விசுவாசி நம்மை கவனித்து கொண்டிருந்‌ தால்‌, சுய-புணர்ச்சியில்‌ ஈடுபடமாட்டோம்‌. அவ்வாறிருக்க, நம்மை கவனிக்கும்‌ தேவனுக்கல்லவா நாம்‌ அதிகம்‌ பயந்திருக்க வேண்டும்‌/

இத்தனை முயற்சிகளுக்கு பின்பும்‌, இந்த சோதனை உங்களை தொற்றிக்‌ கொள்வதை உங்களால்‌ உதறிட முடியவில்லையென்றால்‌, நீங்கள்‌ தனியாக இல்லாமல்‌.... யாராவது ஒருவரோடு சேர்ந்திருக்க நாடுங்கள்‌. குறிப்பாக, அவர்‌ ஒரு விசுவாசியாக இருப்பது நலம்‌/ ஜெயத்தின்‌ பாதையில்‌, இதுவும்‌ உங்களுக்கு துணை செய்யும்‌! விபச்சாரம்‌

ஒரு புருஷனும்‌ ஒரு ஸ்திரீயும்‌ சேர்ந்திருக்கும்‌ பாலிய உறவில்‌, அந்த இருவரும்‌ “ஒரே மாம்சமாய்‌” மாறுகிறார்கள்‌. இதை வேதாகமம்‌ குறிப்பிட்டு “ஒரு வேசியோடு சேரும்‌ ஒருவன்‌, அவளோடு ஓரே சரீரமாகிறான்‌ என்பதை அறியீர்களா? எழுதப்பட்டபடியே இருவர்‌ ஒரே மாம்சமாய்‌ மாறுகின்றார்கள்‌'” எனக்‌ கூறுகின்றது (கொரி. 6:16). பழைய ஏற்பாட்டில்‌ ஒரு ஆணுக்கும்‌ ஒரு பெண்ணுக்கும்‌ ஏற்படும்‌ பாலிய உணர்வை “ஒருவரையொருவர்‌ அறிதல்‌” எனக்‌ கூறப்பட்டிருக்‌ கிறது. ஆகவே பாலிய உணர்வு என்பது, வெறும்‌ சரீரத்திற்குரியது

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 21

அல்ல! அந்த உறவை அவ்வளவு எரி மறந்திட இயலாது! ஏனெனில்‌, “அது” இருவரை “ஒரே மாம்சமாய்‌” மாற்றுகிறது. காரியம்‌

இப்படியாக இருப்பதினால்தான்‌, பாலிய உறவின்‌ தாறுமாறுகளுக்கு நடத்திச்‌ செல்லும்‌ பாதைக்கு அநேக தடைகளை, தேவன்‌ உண்டு பண்ணி வைத்திருக்கிறார்‌. குறைந்தபட்சம்‌, எய்ட்ஸ்‌ மற்றும்‌ சிஃபிலஸ்‌ ஆகிய கொடிய நோய்களை அநேகர்‌ அறிந்திருக்கிறார்கள்‌. “தடை மீறி வேறொருவர்‌ சரீரத்தோடு இணைபவர்களை தேவனே நியாயம்‌ தீர்ப்பார்‌! ' (எபி.79:4 - 15 மொழி பெயர்ப்பு) என்றே வேதம்‌ எச்சரிக்கிறது. இன்றைய இளம்‌ வாலிபர்கள்‌, எவ்வித பொறுப்பும்‌ ஏற்றுக்‌ கொள்ளாமல்‌ இன்பத்தை அனுபவித்திட எத்தணிக்கிறார்கள்‌. ஆகவே தான்‌, திருமண வாழ்வு என்ற உத்தம பெறுப்பை விட்டு விட்டு, பாலிய இன்பத்தை மாத்திரம்‌ அனுபவித்திட சோதிக்கப்படுகிறொர்கள்‌! இவ்வாறு பெண்‌ இனத்தை இழிவுபடுத்த துடிக்கிறவர்கள்‌, தேவனிடமிருந்து கொடிய நியாயத்தீர்ப்பை அடைவது நிச்சயம்‌! இன்றுள்ள மாறுபாடான உலக நண்பர்கள்‌ “உன்‌ ஆண்மையை பாலிய உறவின்மூலம்‌ நிரூபி!” என்றே சவால்‌ விட்டு கூப்பிடுவதுண்டு! அவ்வாறு “பாலுறவு தொடர்புக்கு ஒரு பெண்‌” அவனுக்கு இல்லை யென்றால்‌..... பகடி செய்தும்‌ தூண்டுகிறார்கள்‌. ஓர்‌ சீரிய ஆண்மை பாலிய உறவிலா அடங்கியிருக்கிறது? அல்லவே அல்ல! அவனது சுய- கட்டூபாட்டின்‌ தீரத்தில்தான்‌ மெய்யான சீரிய ஆண்மை ஜொலிக்கிறது! தன்‌ இச்சையை கட்டுப்படுத்த தவறி “பாலிய வீழ்ச்சியடைந்த” தாவீதின்‌ மாதிரியை வேதம்‌ நமக்கு முன்‌ வைக்கிறது. அவன்‌ வீழ்ச்சி யடைந்த சூழ்நிலைகளை சற்று கவனித்துப்‌ பாருங்கள்‌. இந்த நிகழ்வை 2 சாமுவேல்‌ 11:1,2 வசனங்கள்‌ விவரிக்கிறது. வெம்போர்‌ நடந்து கொண்டிருந்த வேளையில்‌, இந்த தாவீது தன்‌ வீட்டில்‌ சோம்பலாய்‌ படுத்துக்‌ கிடந்தான்‌! தன்‌ கடமையை அசட்டை செய்த இவனிடம்‌ சோம்பலும்‌, சுகபோகமும்‌ உள்ளே வந்து பற்றிக்‌ கொண்டது. இந்த சீர்கெட்ட நிலையில்தான்‌ “புத்சேபோளை பார்த்தான்‌. இவன்‌, தன்‌ கண்களைக்‌ கண்டித்து கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்‌. ஆனால்‌ அவனோ உற்று நோக்கிப்‌ பார்த்து, பாவ மோசத்தில்‌ விழுந்தான்‌! மோசமாய்‌ வீழ்ச்சியடைந்த சிம்சோனைச்‌ குறித்தும்‌ வேதாகமம்‌ நியாயாதிபதிகள்‌ 16 & 14 அதிகாரங்களில்‌ கூறுகிறது. இந்த சிம்சோன்‌, தன்‌ பாலிய உணர்ச்சிகளைக்‌ கட்டுப்படுத்தி அடக்காதபடியால்‌, மிக எளிதில்‌ வீழ்ச்சியடைந்தான்‌! ஒரு வசீகரமான பெண்ணைக்‌ கண்ட மாத்திரத்தில்‌, தான்‌ நசரேயத்துவ அழைப்பைப்‌ பெற்ற “தேவனுடைய ஊழியன்‌” என்பதையே மறந்து விட்டான்‌! இதன்‌ விளைவாய்‌ தன்‌ முழு ஊழியத்தையும்‌ இழந்தான்‌. ஒதே வண்ணமாய்‌, வீழ்ச்சியடைந்து தங்கள்‌ ஊழியத்தை இழந்தவர்கள்‌ ஏராளம்‌, ஏராளம்‌!

22 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌!

இதற்கு நேர்மாறாக வாழ்ந்து நிரூபித்த யோசேப்பை பாருங்கள்‌. இவன்‌, தாவீதைப்‌ போன்ற ஐசுவரியமோ அல்லது ஆடம்பரமோ கொண்டவன்‌ அல்ல! சிம்சோனைப்போல தேவனுடைய கனமான ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட வனும்‌ அல்ல! ஆகிலும்‌, எளியவனாய்‌ வாழ்ந்த இந்த வாலிபன்‌ பாலிய இச்சையை முற்றிலுமாய்‌ ஜெயித்து விட்டான்‌. இவனது ஒப்பற்ற சாட்சியை விளங்கச்‌ செய்யும்‌ ஆதியாகமம்‌ 29-ம்‌ அதிகாரத்தை ஒவ்வொரு இளைஞனும்‌ வாசித்து ஓர்‌ நல்ல பாடத்தை படித்துக்‌ கொள்ள வேண்டும்‌. அந்த அதிகாரத்தின்‌ 7-ம்‌ வசனத்தில்‌, ஓர்‌ கொடிய சோதனை யோசேப்பிற்கு திடீரென்று சம்பவித்தது. அந்த சம்பவம்‌ நடக்குமென்ற எச்சரிப்பு ஏதுமில்லாமலே சம்பவித்து விட்டது! இவ்வாறாகவே நமக்கும்‌ கொடிய சோதனைகள்‌ சம்பவித்திட முடியும்‌. இதற்கெல்லாம்‌ முன்கூட்டியே நாம்‌ தயார்‌ நிலையில்‌ இல்லையென்றால்‌, கண்டிப்பாய்‌ வீழ்ச்சியடைந்து விடுவோம்‌! இந்த யோசேப்பு தன்‌ அந்தரங்க ஜீவியத்தில்‌ இச்சையான சிந்தைகளுக்குத்‌ தன்னை உட்படுத்தி வாழ்ந்திருந்தால்‌, அந்த நேரத்தில்‌ ஏற்பட்ட சோதனை வலையில்‌ மிக இலகுவில்‌ விழுந்திருப்பான்‌. ஆனால்‌, இந்த நல்ல யோசேப்போ தேவனுடைய சமூகத்தில்‌ பழகி வாழ்ந்து வந்தவன்‌. அவனுடைய கனவுகளிலும்‌ தேவனையே பார்த்து தரிசித்தவன்‌! ஆகவேதான்‌, அந்த கொடிய சோதனை வந்தபோது, வேறு யார்‌ இருக்கிறார்கள்‌ என்பதை விட “தேவன்‌ தன்னோடு இருப்பது” அவனுக்கு அவ்வளவு ஊர்ஜிதமாய்‌ இருந்தது. இந்த ஒப்பற்ற வாழ்விற்குப்‌ பதிலாக, ஒரு வாலிபனுக்குரிய கவர்ச்சியில்‌ நாட்டம்‌ கொண்டு, ஓர்‌ ஆழமற்ற போலியாக வாழ்ந்திருந்தால்‌, அந்த கடினமான சோதனையில்‌ மிக எளிதில்‌ சிக்கியிருப்பான்‌! யோசேப்பு பாவத்தில்‌ வீழ்ச்சியடையாமல்‌ பாதுகாத்த அவனது உத்தம தெய்வபயத்தை சற்றே தியானியுங்கள்‌. அது, தன்னை யாரும்‌ பார்த்து விடுவார்களோ என்ற இழிவான பயமல்ல! அல்லது தனக்கு தண்டனை கிடைத்துவிடுமோ, என்ற கோழை பயமும்‌ அல்ல! (வச. 9). ஆனால்‌ இவ்வித கீழ்த்தரமான பயத்தின்‌ அடிப்படையில்‌ தான்‌ திரளான ஜனங்கள்‌ இன்று பாவம்‌ செய்யாதிருக்கிறார்கள்‌.... இது ஒரு பரிதாப நிலை அன்றோ! இந்த உத்தம யோசேப்பு தேவனோடு கொண்டிருந்த உறவு, இன்றைய கிறிஸ்தவ இளைஞர்களைப்போல்‌ மேலோட்டமாய்‌ இல்லாமல்‌, தேவனிடம்‌ ஓர்‌ ஆழமான உறவு கொண்டிருந்தான்‌! போத்திபார்‌ மனைவி திரும்பத்‌ திரும்ப பாவத்திற்கு அழைத்த அழைப்பை, யோசேப்பு மறுத்தது ஒரு ஆணித்தரமான செயலாய்‌ இருந்தது (வச 10). சோதனையின்‌ முதல்‌ கட்டத்திலேயே “இல்லை!” என கூறி மறுத்தபடி யால்‌, இரண்டாம்‌ முறை “இல்லை!” எனக்‌ கூறுவ தற்கும்‌.... மூன்றாம்‌ முறை “இல்லை!” எனக்‌ கூறுவதற்கும்‌ அவனுக்கு

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 23

எளிதாயிருந்தது. ஓர்‌ பாமாலையின்‌ அடிகள்‌ கூறுவது போல்‌: சோதனைக்கு இணங்கிடாதீர்‌! இணங்குவது பாவமன்றோ ஜெயித்து வாழ கவனம்‌... மிக கவனம்‌! இந்த ஜெயமே, மற்றொரு ஜெயத்தீற்கு கை கொடுக்கும்‌! போத்திபார்‌ மனைவியின்‌ சமூகத்தை அடியோடு தவிர்த்திட யோசேப்பு நாடினான்‌ என்றே ஆதியாகமம்‌ 39:10 மகிழ்வுடன்‌ கூறுகின்றது. யோசேப்பு கடைபிடித்த பாதுகாப்பு எச்சரிக்கையை நாமும்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌! ஆம்‌, “சோதனையின்‌ காட்சிக்கு” தூர விலகி நின்ற அவனது உத்தமம்‌/ எதிர்பாலரோடு பழக நேரும்‌ யாதொரு சந்தர்ப்பத்திலும்‌, மிக கவனம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌ என “யோசேப்பின்‌ மாதிரி” நம்‌ யாவருக்கும்‌ எச்சரிப்பின்‌ புத்திமதியை கூறுகின்றது. வசீகரமான பெண்கள்‌ இருக்குமிடத்தில்தான்‌ நாம்‌ எச்சரிக்‌ கையாய்‌ இருக்க வேண்டும்‌ என எண்ணி ஏமாந்துவிடக்‌ கூடாது. ஏனெனில்‌ வசீகரம்‌ இல்லாத பெண்களிடமிருந்தும்‌ இந்த அபாயம்‌ துரிதமாய்‌ நம்மை தாக்கி விட முடியும்‌. அது ஏனென்றால்‌, தங்களின்‌ வசீகர குறைவை இந்த பெண்கள்‌ அறிந்திருக்கிறபடியால்‌, தங்களை அழகுப்படுத்த முயற்சிப்பது மாத்திரமல்ல, வாலிபர்கள்‌ தங்கள்‌ சரீரத்தை தொடுவதற்குகூட ஓர்‌ தீய - சுயாதீன போக்கை கடை பிடிப்பார்கள்‌! வேதம்‌ கூறும்‌ எச்சரிப்பை கேளுங்கள்‌ ““எதிர்பாலரின்‌ தாராளமான பழக்கத்திற்கு, கொள்ளை நோயை கண்டதுபோல்‌ விலகி ஓடுங்கள்‌! வேறு எந்த பாவமும்‌ சரீரத்திற்கு வெளியே நடப்பதுதான்‌. ஆனால்‌ வேசித்தன பாவமோ உங்கள்‌ சொந்த சரீரத்திற்குள்‌ நடப்பதாகும்‌. உங்கள்‌ சரீரம்‌ “பரிசுத்தாவியானவர்‌ தங்கி வாழும்‌ ஆலயமென்பதை” மறந்தர்களோ? உங்கள்‌ சரீரம்‌ தேவன்‌ ஈவாய்‌ தந்த அவருடைய வரம்‌ அல்லவோ! உங்கள்‌ சரீரம்‌, உங்களுக்கு சொந்தமானதல்ல என நீங்கள்‌ அறிய வேண்டுமல்லவா? தேவன்‌ உங்களை எவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்கி விட்டார்‌! உங்கள்‌ சரீரத்தின்‌ மூலமாய்‌ தேவனுக்கே மகிமையை கொண்டு வந்து சேருங்கள்‌! ' (கொரி. 6:18-20 8 மொழி பெயர்ப்பு). மேலும்‌ “எந்த வாலிபனுக்கும்‌ ஏற்படுகிற, பாலியத்து தமையான யாதொரு சிந்தைகளுக்கும்‌, விலகி ஓடுங்கள்‌!” எனவும்‌ வாசிக்கிறோம்‌ (2 தீமோ. 2: 22 Living Bible மொழி பெயர்ப்பு). மேற்கண்ட வேத வாக்கியத்திற்கு புகழ்ச்சியாகவே யோசேப்பு நடந்து கொண்டான்‌. பொய்யாய்‌ தூஷிக்கப்பட்டதோ அல்லது கடும்‌ சிறைவாசகத்திற்கு தள்ளப்பட்டதோ, யோசேப்பிற்கு ஒரு

24 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌!

பொருட்டல்ல .... இச்சைக்கு இணங்கி விடக்கூடாது என்பது ஒன்றே அவனுக்கு காரியமாய்‌ இருந்தது! இந்த உத்தம யோசேப்பை தேவன்‌ கனம்‌ பண்ணியதில்‌ எந்த ஆச்சரியமுமில்லை! இந்த முக்கியமான பகுதியில்‌ ஏற்படும்‌ தோல்விதான்‌, இன்று அநேகம்‌ இளைஞர்களை தேவன்‌ கனப்படுத்த முடியாததற்கு காரணமாயிருக்கிறது! ஒருபால்‌ உறவு

ஒரே பாலினத்தினர்‌, தங்களுக்குள்‌ வைத்திருக்கும்‌ பாலிய ஈர்ப்பின்‌ செயலையே ஒருபால்‌ உறவு என குறிப்பிடப்படுகிறது. லோத்தின்‌ நாட்களில்‌ இந்த ஒரு பாவத்திற்காக, அவன்‌ வாழ்ந்த சோதோம்‌ கொமோரா பட்டணத்தை தேவன்‌ நியாயம்‌ தீர்த்தார்‌. லேவி.18: 22-ம்‌ வசனத்திலும்‌ 1கொரி, 6: 9,10-ம்‌ வசனங்களிலும்‌ இவ்வித உறவை தேவன்‌ அருவருத்து, வெகுவாய்‌ கண்டித்துள்ளார்‌. இதுபோன்ற ஒருபால்‌ உறவில்‌ ஈடுபடுகிறவர்கள்‌ “தங்கள்‌ சொந்த சரீரத்திலும்‌, தன்‌ ஆள்தன்மை யிலும்‌ அருவருப்பான சரீர ரோகங்கள்‌ உள்ளவர்கள்‌” என்றே சுட்டிக்‌ காட்டுகிறது (ரோமார்‌.1:26,27-18 மொழிபெயர்ப்பு). “ஒருபால்‌ உறவு செய்பவர்களுக்கு, இரக்கமற்ற மரண தண்டனை தரப்பட வேண்டும்‌!” என பழைய ஏற்பாட்டு பிரமாணம்‌ தெரிவிக்கிறது (லேவி.20:137.

ஒரு பக்தியுள்ள விசுவாசி, ஒருபால்‌ உறவிற்கு யாதொரு வகையிலும்‌ ஈடுபாடு கொண்டிருத்தல்‌ கூடாது என்பது மாத்திர மல்லாமல்‌, தன்‌ சொந்த பாலினத்தினரிடத்தில்‌, இயற்கைக்கு அப்பாற்பட்ட எவ்வித ஈர்ப்பும்‌ ஏற்படுவதிலிருந்து விலகியிருக்கவும்‌ வேண்டும்‌! மேலும்‌, இவ்வித தீய எண்ணத்திற்குரிய செயல்பாடு களோடு தந்திரமாய்‌ நெருங்குபவர்களை இனங்கண்டு, பகிரங்கமாய்‌ எதிர்த்தும்‌ நிற்க வேண்டும்‌! நீங்கள்‌ ஏற்கனவே இந்த கொடிய பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தால்‌, அந்த வலையிலிருந்து விடுவிக்கும்படி தேவனுடைய முகத்தை தேடுங்கள்‌. நல்ல ஆரோக்கியமான சுபாவமாய்‌ எதிர்பாலரோடு கொண்ட உறவை மாத்திரமே தேவன்‌ உங்களுக்கு அருளும்படி ஜெபியுங்கள்‌. நீங்களாகவே இந்த வலையிலிருந்து விடுபட முடியாத பட்சத்தில்‌, ஆவிக்குரிய சகோதரர்களின்‌ ஜெப உதவிகளை நாடுங்கள்‌! “எப்படியாகிலும்‌” சத்துருவை ஜெயித்திடுங்கள்‌!

நம்‌ நாட்களில்‌ பாலியத்திற்குரிய சோதனைகள்‌ பல்வேறு தரப்பில்‌ மண்டிக்‌ கிடப்பதை காண்கிறோம்‌. வேதம்‌ கூறுகிறபடி, பிசாசானவன்‌ பட்சிக்க வகைதேடும்‌ கர்ஜிக்கும்‌ சிங்கமாய்‌ நம்மைச்‌ சுற்றி வருகிறான்‌! அப்படியில்லையென்றால்‌, நம்மை விழச்செய்யும்படி தந்திரமான சர்ப்பமாய்‌ நம்மை அணுகுகிறான்‌ என வேதம்‌ விவரிக்கிறது.

வாலிபர்களை “பாலியத்து ஈர்ப்பை வைத்து” வெகு எளிதில்‌ தனது கண்ணி

“பாலியம்‌” சீரழியாதிருக்க கவனம்‌! 25 வலையில்‌ பிடித்து... அவர்களின்‌ ஜீவியத்தை முற்றிலும்‌ அழித்து விடலாம்‌ என பிசாசு அறிந்திருக்கிறான்‌.

நாம்‌ எந்த அளவிற்கு சுய - கட்டுப்பாடுடனும்‌ விழிப்புடனும்‌ இருக்கிறோமோ, அந்த அளவிற்கே நாம்‌ பாதுகாக்கப்பட முடியும்‌. ஒரு முதுமொழி கூறுவதுபோல்‌ “சுதந்திரமாய்‌ வாழ்வதற்குரிய விலைக்‌ கிரயம்‌, அடிமைப்படாதிருக்கும்‌ விழிப்புணர்வில்‌ தான்‌ இருக்கிறது” என்பது, மெய்யான கூற்றே ஆகும்‌.

எதிரியின்‌ கண்ணியிலிருந்து நம்மைக்‌ காத்து இரட்சிப்பதற்காகவே ஆணித்தரமான தேவனுடைய வார்த்தை நமக்கு அருளப்பட்டி ருக்கிறது. அனேக எச்சரிப்புகளை தேவன்‌ தனது வசனங்களில்‌ தந்துள்ளார்‌. குறிப்பாக, நீதிமொழிகள்‌ புத்தகம்‌ நமக்கு அதிக புத்திமதிகளை வழங்கி யிருக்கிறது. ஆகவேதான்‌ ஓவ்வொரு இளைஞனும்‌ நீதிமொழிகள்‌ புத்தகத்தை கண்டிப்பாய்‌ “அடிக்கடி” வாசிக்க வேண்டியது அவசிய மாகும்‌. மாதத்தில்‌ 30-நாட்கள்‌ இருப்பதுபோல்‌, ஒரு அதிகாரத்தை அந்தந்த தேதியின்படி வாசிக்கும்‌ சிறந்த பழக்கத்தை சில விசுவாசிகள்‌ கைக்கொண்டு வருகிறார்கள்‌. சத்துரு நெருங்கி வருவதை, இந்த புத்தகம்‌ முன்‌ கூட்டியே நம்மை எச்சரித்து உதவி செய்கிறது!

உங்கள்‌ வாலிபத்தில்‌ ஜெயித்து வாழ தீர்மானித்து விட்டீர்களா? அப்படியானால்‌ “ஒரு போர்க்களத்தை நீங்கள்‌ சந்தித்தே தீர வேண்டும்‌. அந்த போர்களத்தில்‌, ஒருபோதும்‌ பின்வாங்கிடக்‌ கூடாது. நீங்கள்‌ ஏற்கனவே வீழ்ச்சியடைந்தவர்களாய்‌ இருந்தால்‌, அந்தப்‌ பாவங்களை தேவனிடத்தில்‌ அறிக்கை செய்து விடுங்கள்‌. நமது கடந்த கால தவறான செய்கைகளையும்‌, அசுத்தமான சிந்தைகளையும்‌ முற்றிலுமாய்‌ கழுவு வதற்கு தேவன்‌ உண்மையுள்ளவராய்‌ இருக்கிறார்‌. இவ்வித பாவங்களின்‌ ஆழத்தில்‌ விழுந்து, அதில்‌ ஊறிப்போனவர்களாய்‌ இருந்தால்‌.... உங்கள்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்படும்‌ அதே நேரத்தில்‌, கடந்த பாவங்களின்‌ விளைவுகளையும்‌ அனுபவித்து வாழும்‌ நிலை ஏற்படக்கூடும்‌! அந்தள விற்கு நீங்கள்‌ மோசமாய்‌ வீழ்ச்சியடையாதவர்களாய்‌ இருந்தால்‌, இனி அதில்‌ விழாதபடி கவனமாய்‌ இருக்கக்கடவீர்கள்‌! ஏனெனில்‌, நிற்கிறேன்‌ என்று எண்ணுகிறவனுக்கு, விழுவதற்கான வாய்ப்பு அதிகமாய்‌ இருக்கிறது! (கொரி.10:12).

நம்மை எப்போதும்‌ வெற்றி சிறக்கும்‌ வாழ்விற்குள்‌ நடத்திடவே தேவன்‌ விரும்புகிறார்‌! கொரி.2:14). அவ்வாறே நம்‌ ஜீவியத்தையும்‌ தேவன்‌ நடத்துவார்‌, என அவரை உறுதியுடன்‌ விசுவாசிப்போமாக/

'எதிர்பாலரின்‌ ஈர்ப்பில்‌” அபாயம்‌... கவனம்‌!

ம] திர்பாலரின்‌ பழக்கத்தையும்‌ நட்பையும்‌, அவர்களைக்‌ குறித்த ரசனையையும்‌ நாடும்‌ “ஒருவித விருப்பம்‌” நம்‌ எல்லோருக்குள்ளும்‌ இருக்கிறது. நம்மு டைய சொந்த பாலினரிடத்தில்‌ கவர்ச்சி ஏற்படுத்துவதை விட, எதிர்பாலரிடத்தில்‌ ஏதாகிலும்‌ ஒரு கவர்ச்சியை உண்டாக்கவே நாம்‌ நாடுகிறோம்‌! இவ்வித கவர்ச்சிக்கும்‌ யாதொரு செயலை, நம்‌ சொந்த பாலினத்தவர்‌ மட்டுப்‌ படுத்தினால்‌ அதைக்குறித்து ஒரு பொருட்டாய்‌ எண்ண மாட்டோம்‌.... ஆனால்‌, எதிர்பாலர்‌ மட்டுப்படுத்தினால்‌, பெருமளவில்‌ ஏமாற்றத்திற்குள்ளாகி விடுவோம்‌! இதுபோன்ற உணர்வு தனக்கு இல்லையென்று ஒருவன்‌ கூறினால்‌, 1) அவன்‌ ஒருபால்‌ உறவு கொண்டவனாய்‌ இருப்பான்‌ அல்லது 2) மாய்மால பொய்யனாய்‌ இருப்பான்‌!

பொதுவாக எல்லா மனிதர்களிடமும்‌ 12 முதல்‌ 14- வயது வரையில்‌ தொடங்கும்‌ பூப்புநிலை' பருவத்தில்‌, எதிர்‌ பாலரிடம்‌ கொண்டிடும்‌ மனநிலையில்‌ பெரியதொரு மாற்றம்‌ தொடங்குகிறது. பொதுவாக, இந்த பருவம்‌ அடைவதற்கு முன்பாக, பையன்கள்‌ பையனோடுதான்‌ இருக்க விரும்புவார்கள்‌! பெண்‌ பிள்ளைகள்‌ பெண்‌ பிள்ளைகளோடுதான்‌ இருக்க விரும்புவார்கள்‌! ஆனால்‌ பூப்பருவம்‌ அடைந்த நிலையில்‌, அவரவர்‌ எதிர்‌ பாலரிடம்‌ “ஒருவித கவர்ச்சி தொடங்க ஆரம்பிக்கிறது. இவ்வித மாற்றத்தை அந்தந்த பாலினத்தார்‌ தைரியமாய்‌ ஒத்துக்கொள்ள மாட்டார்கள்‌! ஆயினும்‌, இவர்களை வசீகரித்த எதிர்பாலரின்‌ கவர்ச்சியானது, அற்ப காரியங்‌ களிலிலேயே வெளிப்படத்‌ துவங்கிவிடும்‌. அது, தன்‌ ஆடை அணிவதில்‌ எடுத்துக்கொள்ளும்‌ அதிக

“எதிர்பாலரின்‌ ஈர்ப்பில்‌” அபாயம்‌.... கவனம்‌! 27

நேரமாகவோ, தன்‌ முக-பாவ தோற்றத்தைக்‌ குறித்த அக்கறையாகவோ அல்லது எதிர்பாலருக்கு முன்பாக தங்களுக்குள்ளிருந்து, தானாகவே வந்து நிற்கும்‌ நளின - நெளிவான மாற்றங்களாகவோ இருக்கும்‌! இதுபோன்ற நிகழ்வுகள்‌ இயற்கையானதும்‌, தவிர்க்க முடியாததும்‌ ஆகும்‌. இவைகளை பாவமென்று சொல்லிடவும்‌ இயலாது! பூப்புநிலையில்‌, இவ்வித கவர்ச்சி மாற்றத்தை சிருஷ்டிகராகிய தேவனே செய்திருக்கிறபடியால்‌, நம்‌ எதிர்பாலரோடு இயற்கையான ஒரு சினேகம்‌ கொண்டிடவும்‌ நம்மிடம்‌ எதிர்பார்க்கிறார்‌. இவ்வித சினேக விருப்பங்களை “அடக்கி கொள்ள வேண்டும்‌” என தேவன்‌ எதிர்பார்ப்பதில்லை. ஆகிலும்‌ இதுபோன்ற விருப்பங்களை நமது கட்டுப்பாட்டிற்குள்‌ வைத்திருக்கவே தேவன்‌ அறிவுறுத்துகிறார்‌! அது, ஒழுக்கத்தின்‌ வரையறையைத்‌ தாண்டி சென்றுவிடாதபடி நாம்‌ காத்துக்கொள்ள வேண்டும்‌! ஆகவே கட்டுப்பாட்டை மீறிய காம சினேகம்‌ ஆபத்தானது என்பதில்‌ சந்தேகமேயில்லை. எதிர்பாலரிடம்‌ பொதுவான சினேக மனப்பான்மை என்பதில்‌ தவறில்லை. “யாரோ ஒருவர்‌ மீது கொண்டிடும்‌ சினேகம்‌” ஆபத்து நிறைந்ததாகும்‌.... இருப்பினும்‌ இவ்வித ஆபத்து நிலையை மனதில்‌ வைத்துக்‌ கொண்டு, எதிர்பாலரை விட்டு விலகி ஓடுவதும்‌ ஆரோக்கியமான செயல்‌ அல்ல! சிலர்‌ தங்களை உயர்ந்த அவிக்குரியவார்களாக எண்ணிக்‌ கொண்டு, தேவையான விஷயங்களைக்கூட எதிர்பாலரிடம்‌ பேசுவதை தவிர்த்துக்‌ கொள்கிறார்கள்‌. இது ஒன்றும்‌ அவிக்குரிய சுபாவம்‌ அல்ல! மாறாக, “இயற்கைக்கு அப்பாற்பட்ட” சுபாவம்‌ என்றே கூற வேண்டும்‌. எதிர்‌ பாலரோடு கொண்டிருக்கும்‌ இயல்பான சினேக மனப்பான்மையை ஆவிக்குரிய தன்மைக்குரியது அல்ல என எண்ணுவது.... திருமணம்‌ ஆவதைப்‌ பார்க்கிலும்‌ தனியாய்‌ இருப்பதே அதிக பாக்கியமானது என போதிக்கும்‌ கொள்கை வேதாந்தமே அகும்‌. வேதபூர்வமாய்‌ இராத எந்த போதனையும்‌ “மறைவான பாவங்களுக்கே்‌ நம்மை நடத்தும்‌! அநேக பக்த குருஜிக்கள்‌ வேசித்தன குற்றத்திற்குள்‌ விழுந்த செயல்‌, இதற்கு ஆதாரமாயிருக்கிறது. இருபாலரோடும்‌ பொதுவான சினேகம்‌ வைத்திருப்பவார்களைக்‌ காட்டிலும்‌, தங்கள்‌ ஒருபாலரோடு மாத்திரமே பழகுவோம்‌ என வாழ்ந்தவர்களே அதிக தீமை கொண்டவர்களாய்‌ இருக்கிறார்கள்‌! இவ்வாறு மேலே தரப்பட்ட செய்தியானது, தங்கள்‌ எதிர்‌ பாலரோடு ஒழுக்கக்‌ கட்டுப்பாடற்ற செயலுக்கு தாராள சுதந்திரம்‌ தந்து விட்டதாக தவறாய்‌ எண்ணி விடாதீர்கள்‌. அவ்வாறு நீங்கள்‌ எண்ணுவது, அடுத்த கோடிக்கு நம்மை இழுத்துச்‌ சென்று விதிமுறை இல்லாத கற்பு சீரழிவிற்கு நம்மை நடத்திவிடும்‌. நாம்‌ முயற்சித்துக்‌ கூற

28 பாலிய ஈர்ப்பும்‌ திருமணமும்‌!

விரும்புவது எல்லாம்‌ “ஓர்‌ ஆரோக்கியமான சமநிலையை” நாம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என்பதேயாகும்‌. பண்டிதர்‌ ஹெர்பர்ட்‌ கிரே எழுதிய “தேவனுடைய உறவில்‌ புருஷர்களும்‌ ஸ்திரீகளும்‌” என்ற புத்தகத்தில்‌ கூறும்போது “திருமண உறவு என்ற புனிதத்தை சீர்‌ குலைக்காமல்‌, ஆண்களும்‌ பெண்களும்‌ சகஜ உறவோடு பேசி வாழ்வது வளமான மகழ்ச்சிக்குரியதே ஆகும்‌! மனுக்குலத்தை இருபாலராக பிரித்த தேவசெயல்‌ போற்றுதற்குரிய செயலென்று நாம்‌ கூறவேண்டும்‌/ ஒரு சில பகிரங்க வித்தியாசப்படுத்தும்‌ செயல்களைத்‌ தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும்‌ சிறந்த நட்பு உள்ளத்தோடு ஒருவருக்கொருவர்‌ உதவுவதும்‌ ஊக்கமளிப்பதும்‌, அவர்களின்‌ ஜீவியத்தை சிறப்பான தாகவே மாற்றும்‌” எனக்‌ கூறினார்‌.

பண்பான நட்பு வேண்டும்‌

பாலிய ஸ்திரீகளை “சகோதரிகளாக” பாவித்து, சகல கற்போடும்‌ நடக்க வேண்டும்‌ என வேதம்‌ புத்தி சொல்லுகிறது தீமோ.5: 27. அதாவது, உங்கள்‌ சொந்த சகோதரியை, ஹேறுபாலர்கள்‌ எப்படி நடத்த நீங்கள்‌ விரும்புவீர்களோ அவ்விதமே, ஓர்‌ வாலிப சகோதரியிடம்‌ நீங்கள்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. இந்தக்‌ கோட்பாட்டின்படி நாம்‌ நடப்பதே, கற்பு ஒழுக்கத்தின்‌ பாதுகாப்பான வழி ஆகும்‌.

இருபாலருமே, ஒருவருக்கொருவர்‌ கனத்தோடும்‌ கண்ணியத்‌ தோடும்‌ நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்‌. அதே வேளையில்‌, விலகி நிற்கவும்‌, கட்டுப்பாட்டின்‌ உணர்வோடும்‌ நடந்துகொள்ள வேண்டும்‌. தனிப்பட்ட ரீதியில்‌ பழகுவதும்‌ அல்லது துருவி ஆராய முயல்வதும்‌ அல்லது எதிர்பாலரோடு வெகு சகஜமாய்‌ கும்மாளமிடுவதும்‌.... ஆகிய

வைகள்‌ ஒருபோதும்‌ காணப்படவே கூடாது. தெளிந்த புத்தியோடு கூடிய நல்ல கட்டுப்பாட்டை பாதுகாத்துக்‌ கொள்வது ஞானமுள்ள செயல்‌ ஆகும்‌. இதனிமித்தமாய்‌, ௬வராசியமான உணர்வை இழப்பதும்‌ கூடாது! மற்ற சமயங்களை விட, நம்‌ எதிர்பாலரோடு அதிக நேரம்‌ பேசி நிற்பதற்கே நாம்‌ சோதிக்கப்படுவோம்‌ என்பதை எப்போதும்‌ ஞாபகத்தில்‌ வைத்திருக்க வேண்டும்‌.... இவ்வாறு ஈர்க்கப்படுவதே அபாயம்‌ நிறைந்ததாகும்‌!

எதிர்பாலருக்கிடையிலான நட்பு, எவ்வித எச்சரிப்பின்‌ தடையும்‌ இல்லாமல்‌ வெகு விரைவில்‌ வளர்ந்து விடும்‌! அந்த வாலிபனோ, தொடர்ச்சியாக தன்‌ திறமைகளையே காட்ட விரும்பும்‌ அதே நேரத்தில்‌, அந்த வாலிபப்‌ பெண்ணோ தன்‌ அழகையெல்லாம்‌ அவனுக்கு காட்ட விரும்புவாள்‌! இச்சமயங்களில்தான்‌, தவறான உள்நோக்கத்தோடு நட்பைத்‌ தேடுவதற்கு விரும்புவார்கள்‌! எதிர்பாலராகிய நீங்கள்‌ மிகுந்த கவனமாய்‌ இருக்க வேண்டும்‌. ஒரு கிறிஸ்தவ வாலிபன்‌, ஒரு வாலிப

“எதிர்பாலரின்‌ ஈர்ப்பில்‌” ௮பாயம்‌.... கவனம்‌! 29

பெண்ணிடம்‌ காணும்‌ பெலவீனத்தை பயன்படுத்தி “அவளை அவன்‌ உண்மையாக விரும்பாத பட்சத்தில்‌” .... அவளை விரும்புவதுபோல்‌ காண்பித்து, அவளது வாலிபத்தை கொள்ளையிட ஒருபோதும்‌ முயற்சிக்க கூடாது! வெற்று வார்த்தைகளில்‌ கூட “ஏதோ அர்த்தத்தை” பற்றிக்‌ கொள்வது அநேக பெண்களிடம்‌ காணும்‌ பழக்கமாகும்‌! இந்த உண்மையை எல்லா இளைஞர்களும்‌ மறவாதிருக்க வேண்டும்‌! ஆகவே, கடிதங்கள்‌ எழுதுவதையோ, பொதுவாக வீட்டிற்கு வர அழைப்பு விடுப்பதையோ முற்றிலுமாய்‌ தவிர்த்து விட வேண்டும்‌. இவையனைத்திலும்‌ “ஓர்‌ தவறான அர்த்தத்தை” பெண்கள்‌ பிடித்துக்‌ கொள்வார்கள்‌! இதனிமித்தமே, சில ஆவிக்குரிய காரியங்களைக்கூட கடிதமாய்‌ எழுதுவதை தவிர்த்திட வேண்டும்‌. மேலும்‌, திருமணமாகாத எதிர்பாலரிடம்‌ ஆலோசனை கேட்பதோ அல்லது தனிப்பட்ட உதவி கேட்பதோ அல்லது ஆவிக்குரிய விஷயங்களைப்‌ பரிமாறி கொள்‌ வதற்கோ, அவர்களை அணுகுவுது ஞானமற்ற செயல்‌ ஆகும்‌/ இவ்வாறு நாம்‌ குறிப்பிடும்போது, வாழ்க்கைத்‌ துணையை தேடும்‌ சமயத்தில்‌, ஒரு எதிர்பாலரை வாழ்க்கை துணையாக மனதில்‌ கருதிட முடியாது என நாம்‌ குறிப்பிடவில்லை! ஆனால்‌, ஒரு மாணவ பருவத்தில்‌ தன்‌ எதிர்பாலரோடு வைத்திடும்‌ எவ்வித தனிப்பட்ட நட்பும்‌ ஞானமற்ற செயல்‌ என்பதை நிச்சயமாய்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌! ஒரு மாணவன்‌ தன்‌ பாலிய மன எழுச்சிகளை ஐஸ்‌-பெட்டியில்‌ பாதுகாப்பாய்‌ வைப்பது போல்‌ வைத்துவிட்டு, தன்‌ பாடங்களில்‌ மாத்திரமே அதிக கவனம்‌ செலுத்த வேண்டும்‌. ஒரு வாலிபன்‌, தன்‌ முழு படிப்பையும்‌ முடிக்கும்‌ வரை திருமணத்திற்கு சிந்தை வைத்திடக்‌ கூடாது! அல்லது ஒரு வாலிபன்‌ குறைந்தபட்சம்‌ 25-வயது முடியும்‌ வரை, ஒரு வாலிப ஸ்திரீ குறைந்தபட்சம்‌ 20-வயது முடியும்‌ வரை திருமணத்தைக்‌ குறித்து யாதொரு சிந்தையும்‌ வைத்திடக்‌ கூடாது. தங்கள்‌ படிப்பின்‌ அல்லது வேலையின்‌ உபரியான நேரத்தை, மு முழு கவனம்‌ செலுத்தி “கர்த்தருடைய பணிக்கு மாத்திரமே” தங்களை ஓப்புவித்திட வேண்டும்‌. திருமணத்தோடு சேர்ந்து, தவிர்க்க முடியாத பொறுப்பு களும்‌ சேர்ந்து வருகிறபடியால்‌, திருமணத்திற்கு முன்பு தன்‌ நேரத்தை பயன்படுத்தி ஊழியம்‌ செய்ததுபோல்‌.... திருமணத்திற்குப்‌ பிறகு ஊழியம்‌ செய்வது கடினம்‌. இந்த புத்திமதி என்னவெனில்‌, ஒரு மனைவியை தேடுவதற்கும்‌ அல்லது ஒரு கணவனை தேடுவதற்கும்‌ தங்கள்‌ மனதை வைத்து, வாலிபர்கள்‌ அதிக நேரத்தை வீணாக்கிப்‌ போடுகிறார்கள்‌. திருமண வாழ்வில்‌ ஈடுபட்டவனைவிட, எதீர்பாலரின்‌ தனிப்பட்ட நபரோடு ஆரோக்கியமற்ற நட்பிற்காக தங்கள்‌ நேரத்தை பாழடித்தவர்கள்‌ ஏராளம்‌!

30 பாலிய ஈர்ப்பும்‌ தீருமணமும்‌!

திருமணத்திற்கு சற்று பொறுத்து, தமாதிப்பதற்குரிய ஒரு நல்ல காரணம்‌ என்னவென்றால்‌, வாலிபர்களுக்கு மனதளவிலான நிதானமான முதிர்ச்சி, நாம்‌ ஏற்கனவே குறிப்பிட்ட வயது ஹம்பிற்குப்‌ பிறகுதான்‌ ஏற்பட முடியும்‌! அந்த முதிர்ச்சி நிலையில்தான்‌, ஒருவன்‌ தன்‌ வாழ்க்கை துணையை ஞானமாய்‌ தேட முடியும்‌. இது குறித்து அதிக விளக்கத்தை 5-வது அத்தியாயத்தில்‌ நாம்‌ அதிகமாய்‌ காணலாம்‌.

ஆகவே எதிர்பாலரோடு கொண்டிடும்‌ இயல்பான சினேகம்‌, ஒருபோதும்‌ நெருங்கி நிற்பதாய்‌ இருத்தல்‌ கூடாது! குறைந்தபட்சம்‌ இருமணத்திற்கு பேசி முடிக்கும்‌ தருவாய்‌ வரைக்கும்‌, நெருங்கிய உறவு இருக்கக்‌ கூடாது! வாலிப பெண்களைவிட வாலிப பையன்கள்தான்‌, எதிர்பாலரோடு கொண்ட பழக்கத்தில்‌ மிகுந்த கவனமும்‌... ஒருவருக்‌ கொருவர்‌ நேர்மையாகவும்‌ நடத்தல்‌ வேண்டும்‌. இருபாலரிடமும்‌, “அவர்களின்‌ உள்ளான நோக்கம்‌”மிகுந்த நேர்மையாய்‌ இருக்க வேண்டும்‌. ஆனால்‌, இவ்வித ஒழுக்க நெறியிலிருந்து தவறியபடி யால்‌, அநேகருடைய வாழ்க்கையில்‌ மன அழுத்தங்களும்‌, மனச்சோர்வுகளும்‌ ஏற்பட்டு, தடுமாற்றம்‌ அடைந்திருக்கிறார்கள்‌! இவ்வித நிலை மாணவ பருவத்திலிருந்தவர்களுக்கு ஏற்பட்டு, பரீட்சையில்‌ தோல்வி அடைந்து தங்கள்‌ கிறிஸ்தவ சாட்சியை கூட இழந்திருக்கிறார்கள்‌. இவ்வித பரிதாப நிலைக்கு முதல்‌ காரணம்‌ ஆண்மகன்தான்‌ என்றாலும்‌.... தன்‌ வசீகர தன்மையால்‌ இடைவிடாத ஈர்ப்பை உண்டு பண்ணிய பொறுப்பு, “அந்தப்பெண்ணிற்கும்‌” உரியதாகும்‌. ஆகவே இருபாலருமே இவ்விஷயத்தில்‌ மிகுந்த கவனம்‌ கொண்டிருக்க வேண்டும்‌. வாலிப இளைஞர்கள்‌, பெண்ணின்‌ திருமண வாழ்வின்‌ எதிர்காலத்தை மிக எளிதில்‌ பாழாக்கிவிட முடியும்‌ என்பதை உணர்ந்திருக்க வேண்டும்‌! அது எப்படி யெனில்‌, அந்த வாலிப பெண்ணிடம்‌ மிக நெருங்கிப்‌ பழகுவதும்‌ அல்லது அந்தப்‌ பெண்ணை, தான்‌ திருமணம்‌ செய்யப்‌ போவதைப்‌ போன்ற தோற்றத்தை பிறருக்கு ஏற்படுத்தி விட்டு.... “உண்மையில்‌ அந்த நோக்கம்‌ இல்லாமல்‌” திருமணத்திற்கு விலகிச்‌ செல்லும்போது.... அந்தப்‌ பெண்ணின்‌ வாழ்வில்‌ சீரழிவை கொண்டு வரமுடியும்‌! இப்படியெல்லாம்‌ நடந்து கொள்ளும்‌ “ஒரு வாலிப பையனுக்கு” யாதொரு சேதமும்‌ அவன்‌ எதிர்காலத்திற்கு அல்லது அவன்‌ சாட்சிக்கு ஏற்படாது! ஆனால்‌, இவ்வித நிலைக்கு பலியான அந்தப்‌ பெண்‌.... அவள்‌ பட்சத்தில்‌ யாதொரு பிழை இல்லாத போதும்‌, மற்றவர்களால்‌ இழிவாகவே கருதப்படுவாள்‌! இதுபோன்ற தீதான நடக்கைகள்‌ எந்த ஒரு கிறிஸ்தவ இளைஞனிடமும்‌ காணப்படவே கூடாது. இத்தகைய செயலுக்கு ஒரு இளைஞனே முதல்‌ காரணமாய்‌ இருக்கிறபடியால்‌.... மேற்கூறிய யாதொரு தகாத செயலும்‌ நடை பெறுவதை தடுப்பதற்குரிய முக்கிய பொறுப்பு இந்த வாலிப

“எதிர்பாலரின்‌ ஈர்ப்பில்‌” அபாயம்‌.... கவனம்‌! 31

இளைஞனையே சார்ந்ததாகும்‌!

பிறருடைய வாழ்க்கையை பணயமாய்‌ வைத்து விளையாடும்‌ தீமை நம்மில்‌

ஒருவருக்கும்‌ சம்பவிக்க கூடாது. இக்கொடிய தீமை செய்ய துணிந்த

வர்களை, தேவன்‌ வெகு கடுமையாய்‌ தண்டித்து நியாயம்‌ தீர்ப்பார்‌!

வாலிபர்கள்‌, யாரோ ஒரு எதிர்பாலரிடம்‌ “இரகசியமாய்‌ பிரியம்‌ வைத்து” அதை யாருக்கும்‌ சொல்லாமலே இருக்கக்‌ கூடும்‌. அவர்களுக்‌ குள்ளான பிரியம்‌ நாளுக்குநாள்‌ வளர்ந்து, அது இன்னமும்‌ மறை வாகவே இருந்திடக்‌ கூடும்‌. ஆனால்‌ “அவ்வித பிரியத்திற்குரிய ஒருவா்‌” வேறொருவரை திருமணம்‌ செய்யும்போது, அந்த மற்றொருவருக்கு பெருத்த ஏமாற்றத்தையும்‌ மன உளைச்சலையும்‌ ஏற்படுத்தி விட முடியும்‌. காரியம்‌ இவ்வாறாய்‌ இருக்கிறபடியால்‌, உங்கள்‌ எண்ணங்‌ களில்‌ பிரதிபலித்த இதுபோன்ற “பிரியத்தை” உங்கள்‌ பெற்றோர்‌ களிடமோ அல்லது ஒரு